கருப்பு உப்பை எடுத்து கொள்வதால் கிடைக்கும் நன்மைகள் !!

புதன், 25 மே 2022 (11:46 IST)
பொதுவாக கடல் நீரிலிருந்துதான் உப்பு பெறப்படுகிறது. ஆனால், பாறைகள் மூலமும் உப்பு பெறப்படுகிறது.


இமய மலைப் பகுதிகளிலிருந்தும், நேபாளப் பகுதியிலிருந்தும் ஒரு வகை உப்பு எடுக்கப்படுகிறது. இவ்வகை உப்புக்கு கருப்பு உப்பு என்று பெயர். இதில் இருப்பதும் சோடியம் குளோரைடு தான். கருப்பு உப்பில், கடல் உப்பைவிட சோடியம் குறைவாகக் காணப்படுகிறது.

வட இந்தியாவில் ‘காலா நமக்’ என்று பெயர் கொண்ட கருப்பு உப்பையே மக்கள் அதிகம் உணவில் சேர்த்துக் கொள்கிறார்கள்.

தினமும், தக்காளி சாறில், கருப்பு உப்பு கலந்து குடித்து வந்தால், பொடுகுத் தொல்லையிலிருந்து விடுதலை பெறலாம்.

குளிக்கும் நீரில் கருப்பு உப்பைக் கலந்து குளித்தால், சருமத்தில் வெடிப்புகள் விழாமல், வழவழப்பாக இருக்கும்.

கால் பாதங்கள் வீங்கி, வெடிப்புக்கள் இருந்தால், சிறிது கருப்பு உப்பை, வெந்நீரில் கலந்து, பாத்திரத்தில் நிரப்பி, பாதத்தினை நீருக்குள் மூழ்கினாற்போல் வைத்திருந்தால், வீக்கமும் குறையும். வெடிப்புக்களும் மறையும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்