கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க உதவும் உணவுகள் என்ன...?

Webdunia
சனி, 29 ஜனவரி 2022 (16:25 IST)
வெங்காயத்தில் கியர்சிடின் என்னும் வேதிப் பொருள் காணப்படுகின்றது. இது ஒரு பிளேவனாய்டு ரகம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பொருள் உடலில் உள்ள ரத்தக்குழாய்களில் சேர்ந்துள்ள கெட்ட கொழுப்பைக் கரைக்கும் குணம் கொண்டவை.


வெங்காயத்தை உணவுகளில் தேவையான அளவு சேர்ப்பதன் மூலம் கொலஸ்ட்ரால் குறையத் தொடங்கும்.

பசலைக் கீரையில் லுடீன் என்னும் பொருள் காணப்படுகின்றன. இவைக் கெட்ட கொழுப்பைக் கரைக்கச் சிறந்த முறையில் உதவுகின்றது. ஆக வாரம் இரண்டு முறை பசலைக்கீரையை உணவில் சேர்ப்பது உகந்தது.

ஒவ்வொரு காய்கறிகளிலும் ஒவ்வொரு விதமான சத்துக்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. பீன்ஸில் நிறைவான அளவு நார்ச்சத்து உள்ளது. பீன்ஸை கொண்டு சூப் தயாரித்து , அடிக்கடி அருந்தலாம். இதன் மூலம் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.

பூண்டில் அலிசின் என்னும் வேதிப்பொருள் காணப்படுகின்றது. இந்தப் பொருள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள பெரும்பங்காற்றுகிறது. இதயத்திற்குச் செல்லும் ரத்த நாளங்களில் தேங்கிய கொழுப்பை கரைக்க, இது உதவுகிறது.

கொள்ளு சட்னி ,துவையல், பருப்பு போன்றவற்றைத் தயாரித்துச் சாப்பிடலாம். இது கெட்ட கொலஸ்ட்ராலை நீக்க உதவும்.

உணவில் புடலங்காயை அடிக்கடி சேர்ப்பது மிகவும் நல்லது. புடலங்காய் வைத்துப் பொரியல், கூட்டு, குழம்பு போன்ற பல்வேறு உணவுகளைத் தயாரிக்க முடியும். இது கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்க உதவும்.

வால்நட்டில் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் உள்ளது. இது கெட்ட கொழுப்பின் அளவை குறைக்க உதவுகிறது. ஆக இந்த நட்ஸை தினம் சாப்பிடுவது உகந்தது. இதனால் எளிதில் கெட்ட கொலஸ்ட்ரால் குறையும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்