முடியை கருமையாக்க உதவும் சிறந்த இயற்கை மருத்துவகுறிப்புகள் என்ன...?

வெள்ளி, 1 ஜூலை 2022 (10:45 IST)
நெல்லிக்காய் பவுடரில் எலுமிச்சை சாற்றினை கலந்து தலையில் சிறிது நேரம் ஊற வைத்து பின்பு கழுவ வேண்டும். இப்படி சிறிது காலம் செய்து வந்தால் சிறந்த பலனை பெறலாம்.


எலுமிச்சை மற்றும் நெல்லிக்காய் அதிகளவு சாப்பிட பழகிக் கொள்ளுங்கள். இது முடிக்கு தேவையான ஆரோக்கியத்தை கொடுக்கும். எலுமிச்சை சாறு மற்றும் தேங்காய் எண்ணெய் முடியை கருமையாக்க சிறந்த உதவியாக இருக்கும்.

தேங்காய் எண்ணெய்யில் எலுமிச்சை சாற்றினை கலந்து தலையில் நன்கு ஊறவைத்து பின்பு ஷாம்போ கொண்டு அலச வேண்டும். இப்படி இரண்டு நாட்களுக்கு ஒரு தடவை செய்து வந்தால் சிறந்த பலனை அடையலாம்.

வெங்காயம் தலைமுடி உதிர்வை தடுப்பதுடன் முடிக்கு தேவையான போஷாக்கினை வழங்கி முடியை கருமையாக்க உதவும்.

வெங்காய சாற்றினை தலையில் உற வைத்து பின்பு ஷாம்போ கொண்டு கழுவ வேண்டும். இது தலையில் உள்ள கிருமிகளை அழிப்பதுடன் போஷாக்கினையும் வழங்குகின்றது. இதனை தினமும் செய்தால் தான் சிறந்த பலனை பெற முடியும்.

இளநரை மற்றும் முடியை கருமையாக்க சிறந்த இயற்கை பொருள் கறிவேப்பில்லை ஆகும். கறிவேப்பிலையை உலர வைத்து பொடியாக்கி தலையில் ஊற வைத்து சிறிது நேரம் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு தினமும் செய்தால் இளநரை பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.

தலைக்கு வைக்கும் எண்ணெய்யில் கறிவேப்பிலை இலை அல்லது விதையை ஊறவைத்து தினமும் தலைக்கு வைத்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். உணவில் அதிகளவு கறிவேப்பிலை சேர்க்க வேண்டும். கறிவேப்பிலையை உணவில் சேர்த்து சாப்பிடுவது சிறந்த பலனை கொடுக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்