மலச்சிக்கல் ஏற்பட முக்கிய காரணங்கள் என்ன தெரியுமா...?

வெள்ளி, 1 ஜூலை 2022 (09:36 IST)
மலசிக்கல் பிரச்சனை இருக்கின்றவர்கள் சரியான தூக்கம் இல்லாமை மற்றும் வயிறுவலி போன்ற பல ஆரோக்கிய பிரச்சனைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.


உடலில் உள்ள உணவுக் கழிவுகள் இலகுவாக நம் உடலில் இருந்து வெளியேற நம் உணவுகளில் கட்டாயம் நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்துக்கள் இருக்க வேண்டும். நாள் முழுவதும் உட்கார்ந்து வேலை செய்பவர்கள், உடல் உழைப்பு இல்லாதவர்களுக்கு செரிமான கோளாறுகள் ஏற்படும். நாளடைவில் அது மலச்சிக்கலை உண்டாக்கும்.

நார்ச்சத்து குறைவாக உள்ள உணவுகளை எடுத்துக்கொள்வது, அதிக காரமான உணவுகளை எடுத்துக்கொள்வது மற்றும் தூக்கமின்மை போன்ற காரணங்களால் மலச்சிக்கல் பிரச்சனை உருவாகும்.

தொடர்ந்து மது அருந்துவது உடலில் நீரிழப்புக்கு வழிவகுக்கும், இது மலச்சிக்கல் மற்றும் வீக்கத்தை மோசமாக்கும். பால் மற்றும் பால் சார்ந்த பொருட்களில் அதிக புரத உள்ளடக்கம் இருப்பதால் சில சமயங்களில் மலச்சிக்கல் அல்லது வயிற்றுப்போக்கு ஏற்படலாம்.

எண்ணெய் மற்றும் துரித உணவுகளை அதிகம் சாப்பிடுவது படிப்படியாக மலச்சிக்கல் அபாயத்தை அதிகரிக்கும். அதிக கொழுப்பு நிறைந்துள்ள உருளைக்கிழங்கு சிப்ஸ் கலோரிகளை மட்டும் அதிகரிப்பதில்லை. அதனுடன் சேர்த்து செரிமான நேரத்தையும் அதிகமாக்கும்.

உணவு கழிகளை வெளியேற்றும் உணர்வு வந்தவுடனே வெளியேற்ற வேண்டும். தாமதிக்கும் போது மலச்சிக்கல் பிரச்சனையை இன்னும் அதிகமாகின்றது. இதற்கு சிறிது உலர் திராட்சை பழத்தை விதையுடன் இரவில் ஊற வைத்து காலையில் அந்த தண்ணீருடன் அருந்தினால் விரைவில் நல்ல பலன் கிடைக்கும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்