தொப்புளில் எந்த எண்ணெய்யை வைப்பதால் என்ன நன்மைகள்...?

Webdunia
நம் உடலில் தொப்புள் மிகவும் மென்மையான ஆற்றல் வாய்ந்த பகுதி. நம் உடலில் ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கு தொப்புளில் தினமும் வைப்பதின் மூலம் உடலில் ஏற்படும் சில பிரச்சனைகளுக்கு தீர்வு காணலாம்.

வேப்பிலை எண்ணெய்: வேப்பிலை எண்ணெயை நாம் தொப்புளில் தடவினால் முகத்தில் ஏற்படும் வெள்ளைப்புள்ளிகள் அல்லது வெள்ளை நிறத் தழும்புகள்  குணமாகும்.
 
எலுமிச்சை எண்ணெய்: லுமிச்சை எண்ணெயை தினமும் தொப்புளில் தடவினால் முகத்தில் ஏற்படும் கருமைகள் மற்றும் கரும்புள்ளிகள் விலகும்.
 
நெய்: நெய்யை தொப்புளில் தடவினால் முகம் அழகு பெரும் மற்றும் சருமம் மென்மையாக இருக்கும்.
 
பாதாம் எண்ணெய்: பாதாம் எண்ணெய்யை தொப்புளில் தடவினால் முகம் பளபளப்பாகவும் சருமம் பொலிவுடனும் காணப்படும்.
 
கடுகு எண்ணெய்: உடல் வெப்பத்தின் காரணமாக உதடுகளில் வெடிப்பு ஏற்படும். கடுகு எண்ணெய்யை தொப்புளில் தடவுவதன் மூலம் இந்த பிரச்சனை  குணப்படுத்தலாம்.
 
விளக்கெண்ணெய்: முழங்கால் வலி உள்ளவர்கள், விளக்கெண்ணெய்யை தினமும் இரவில் படுக்கும் முன் தொப்புளில் வைத்தால், முழங்கால் வலி குறையும்.
 
குறிப்பு: தொப்புளில் எண்ணெய் வைக்கும்போது தொப்புளை சுற்றி சிறிது நேரம் வலஞ்சுழி மற்றும் இடஞ்சுழியாக மசாஜ் செய்யவேண்டும். ஆனால் இந்த முறையை  உணவு அருந்திய உடனே செய்யக் கூடாது. உணவருந்திய பின் 1 மணி நேரம் கழித்து இந்த முறையை செய்யவேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்