வெறும் வயிற்றில் வெந்தய விதைகளை சாப்பிடுவதால் என்ன பயன்கள்....?

Webdunia
செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (17:27 IST)
வெந்தயம் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்திருப்பதுடன் வளர்சிதை மாற்றத்தையும் மேம்படுத்துகிறது. வெந்தய விதையில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தை மேம்படுத்துவதிலும் பயனுள்ளதாக இருக்கின்றன.


வெந்தயம் அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. இதில் அதிக நார்ச்சத்துக்கள் உள்ளன. எனவே தான் இரத்த சர்க்கரை அளவை கட்டுப்பாட்டில் வைக்கவும் எடையை குறைக்கவும் உதவுகிறது.

நரம்புத் தளர்ச்சி, பக்கவாதம், மலச்சிக்கல், வயிற்றுவலி, வீக்கம், முதுகுவலி, முழங்கால் மூட்டு வலி முதல் தசைப்பிடிப்பு வரை உடலின் எந்தப் பகுதியிலும் வலி போன்ற வாத நோய்களுக்கு சிகிச்சையளிப்பதில் வெந்தய விதைகள் பயனுள்ளதாக இருக்கின்றன.

வெந்தய விதையில் கரையக்கூடிய நார்ச்சத்து நிறைந்துள்ளது. இது கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்தத்தை மேம்படுத்துவதிலும் பயனுள்ளதாக இருக்கின்றன.

வெந்தய விதைகள் கார்போஹைட்ரேட்டின் செரிமானத்தை மெதுவாக்கும். இது, இருமல், ஆஸ்துமா, மூச்சுக்குழாய் அழற்சி, மார்பு நெரிசல் மற்றும் உடல் பருமன் போன்ற பிரச்சனைகளை கட்டுப்படுத்த உதவுகின்றன.

 உடல் எடையை குறைக்க காலையில் வெறும் வயிற்றில் வெந்தய விதை நீரை குடிக்கலாம். ஒரு ஸ்பூன் வெந்தயத்தை இரவில் தண்ணீரில் ஊற வைக்கவும். இந்த நீரை விதைகளுடன் காலையில் கொதிக்க வைத்து வடிகட்டி வெறும் வயிற்றில் உட்கொள்ளவும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்