இத்தனை அற்புத சத்துக்களை கொண்டுள்ளதா பாதாம் !!

செவ்வாய், 16 ஆகஸ்ட் 2022 (13:43 IST)
தினமும் ஒரு கைப்பிடி அளவு பாதம் உண்டு வருபவர்களின் மூளை வளர்ச்சி அபாரமாக இருக்கும். வளரும் குழந்தைகளுக்கு தினமும் பாதாமினை கொடுத்து வந்தால் அவர்களின் மூளை வளர்ச்சியில் நல்ல மாற்றத்தினை காண முடியும்.


பாதாமில் அதிக அளவு நார்சத்து உள்ளது. இது உடலில் அதிக அளவு சர்க்கரை உறிஞ்சுவதை தடுத்து உங்களுக்கு சர்க்கரை வியாதி வராமல் காக்கும். மேலும் சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இதனை உட்கொண்டு வந்தால் அவர்களின் இரத்த சர்க்கரையின் அளவு கணிசமாக குறைந்து வரும்.

பாதாமில் குறைந்த அளவு சோடியம் மற்றும் அதிக அளவு பொட்டாசியம் நிறைந்துள்ளது. இரத்த அழுத்தத்தினை குறைக்க பொட்டாசியம் மிக மிக முக்கியமான ஒன்று ஆகும். பாதாமில் உள்ள பொட்டாசியம் சத்து உங்களின் இரத்த அழுத்தத்தினை கட்டுக்குள் வைக்க மிகவும் உதவியாக இருக்கும்.

பாதாமில் அதிக அளவு ப்ரோடீன், வைட்டமின் இ, இரும்புச்சத்து, மற்றும் முடிக்கு தேவையான அனைத்து சத்துக்களும் நிறைந்துள்ளது. இதனை தினமும் உண்டு வந்தால் முடி கொட்டுதலை தடுத்து முடி வளர்ச்சிக்கு வழிவகுக்கும்.

இதய ஆரோக்கியத்திற்கு நல்ல கொழுப்புகள் மிக மிக அவசியம். பாதாமில் அதிக அளவில் நல்ல கொழுப்புகள் நிறைந்துள்ளது.இவை உடலில் உள்ள தேவையற்ற கெட்ட கொழுப்புகள் அனைத்தையும் வெளியேற்றும். எனவே இருதய ஆரோக்கியத்தினை பாதுகாக்க தினமும் ஒரு கைப்பிடி அளவு பாதாமினை உட்கொண்டு வாருங்கள் உறவுகளே.

பாதாமில் அதிக அளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. 100 கிராம் பாதாமில் கிட்டத்தட்ட 12 கிராம் அளவுக்கு நார்சத்து உள்ளது. இவை குடல் ஆரோக்கியத்தினை மேம்படுத்துவதோடு மட்டுமில்லாமல் மலசிக்கல் பிரச்சினையை, முற்றிலுமாக தடுக்க உதவுகின்றது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்