'சர்வரோக நிவாரணி' என்று சொல்வார்கள். அனைத்து வியாதிகளுக்கு ஒரே தீர்வு! அந்த அளவுக்கு செரிமான கோளாறு, இரத்த சோகை, சுவாச மண்டல பிரச்னை, தூக்கமின்மை, ஞாபக சக்தி குறைவு, சரும நோய் என்று பல்வேறு உடல்நல குறைபாடுகளை தீர்க்கக்கூடிய ஒரு பொருள் உள்ளது. சாதாரணமாக வீட்டில் புழங்கும் சீரகத்தில்தான் இத்தனை மருத்துவ குணங்களும் உள்ளது.
செரிமான கோளாறுகளின் அறிகுறிகளான வயிற்றுப்போக்கு, குமட்டல் மற்றும் வாயு தொல்லை ஆகியவை இருக்காது. நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்கிறது நம் உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றல் நன்றாக வேலை செய்வதற்கு இரும்பு சத்து அவசியம்.
சளி மற்றும் இருமலை உருவாக்கும் கிருமிகளை சீரக நீரிலுள்ள சத்துகள் அழிக்கின்றன. நினைவுத்திறனை அதிகரிக்கிறது மூளையின் திறனை மேம்படுத்தும் இயல்பு சீரகத்திற்கு உள்ளது. வேலையில் கவனம் செலுத்தவும், ஞாபக சக்தியை கூர்மைப்படுத்தவும் சீரகம் உதவுகிறது. தூக்கமின்மையை போக்குகிறது.