இந்து உப்பு அல்லது பாறை உப்பு என்கிற உப்பு மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது. இமயமலை பகுதியில் பாறைகளை வெட்டி எடுக்கப்படும் உப்பை இந்து உப்பு, பாறை உப்பு என்று அழைக்கிறார்கள்.
மங்கலான பழுப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் காணப்படும் இந்த ரக உப்பில், கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், சல்பர் மற்றும் புளோரைடு, அயோடின் போன்ற தாதுக்களுடன் ‘சோடியம் குளோரைடு’ அதிக அளவில் உள்ளது.
குளிர்ச்சியூட்டும் தன்மை உள்ள இந்த உப்பு, பசியைத் தூண்டி, மலத்தை இளக்கும். சாதாரண உப்பில் இருப்பதைப் போலவே பாறை உப்பிலும் சோடியம் குளோரைடு இருப்பதுடன் இயற்கையாகவே அயோடின் சத்து, லித்தியம், மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், குரோமியம், மாங்கனீஸ், இரும்பு, துத்தநாகம் உள்ளிட்ட நுண் சத்துகளும் உள்ளன.
இந்த வகை உப்பை உணவில் தினமும் உபயோகித்து வந்தால், வாதம், பித்தம் மற்றும் கபம் போன்ற வியாதிகள் நீங்கி, உடல் வலுவாகும் என்றும், மூல வியாதிகள் மற்றும் வயிற்றுப் புண்கள் நீங்க மருந்தாக பயன்படுகிறது.