பற்களை பாதுகாத்துக்கொள்ள உதவும் சில எளிய மருத்துவ குறிப்புகள் என்ன...?

புதன், 5 ஜனவரி 2022 (10:15 IST)
பற்களில் ரத்தம் கசிந்தால் தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் வெதுவெதுப்பான உப்பு நீரில் வாய் கொப்பளித்தால் பல்வலி மற்றும் ஈறு வலி வராது.

உப்பு சிறந்த கிருமி நாசினி. அது பற்களின் வேர் வரை சென்று கிருமிகளை அழிக்கிறது. இதனால் ரத்தம் கசிவதும் நின்றுவிடும். இதை, எல்லாருமே செய்யலாம். இரவு படுக்கும் முன்பு உப்பு தண்ணீரில் வாய் கொப்பளித்து விட்டு படுத்தால் பற்களுக்கு நல்ல பாதுகாப்பை தரும்.
 
மஞ்சள் ஒரு கிருமி நாசினி மற்றும் ஆன்டிஆக்ஸிடென்ட் நிறைந்தது. ஈரில் ஏற்படும் சிறந்த மருந்தாகும். மஞ்சளை நீருடன் கலந்து பேஸ்ட் போன்று செய்து வீக்கம் இருக்கும் இடத்தில் தேய்த்து மெதுவாக மசாஜ் செய்யவேண்டும். பிறகு ஐந்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கொப்பளிக்க வேண்டும். இதை, தினமும் இரண்டு முறை செய்யலாம்.
 
ஈறு சம்பந்தமான பிரச்சனைகள் மட்டுமின்ற , உடலின் எல்லா பிரச்சனைகளுக்கும் நல்ல தீர்வை தரக்கூடியது. ஈரின் வலியே ரத்த நாளங்களில் ஊடுருவி பல் சம்பந்தமான நோயை மட்டுமில்லாமல் பல் நோய்களே இல்லாமல் செய்கிறது. 
 
இதற்கு ஒரு தேக்கரண்டி நல்லெண்ணெய்யை வாயில் ஊற்றி ஈரின் உள்ளே செல்லும்படி சில நிமிடங்கள் கொப்பளிக்க வேண்டும். அதாவது, எண்ணெய் வெள்ளை நிறமாக மாறும் வரை கொப்பளிக்க வேண்டும். பல் துலக்குவதற்கு முன்னர், இதை செய்ய வேண்டும். 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்