வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நல்ல அளவில் நிறைந்துள்ள வால்நட்ஸ் !!

Webdunia
வால்நட்ஸ் என்று அழைக்கப்படும் அக்ரூட் பருப்பின் எண்ணிலடங்காத பல நன்மைகள் இருக்கின்றன இருதய சம்பந்தமான பிரச்சினைகள் முதல் புற்றுநோய் வரை உடலில் ஏற்படும் பல நோய்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக இருக்கிறது.

ஆரோக்கியம் நிறைந்த நார்ச்சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் என பல சத்துக்கள் நல்ல அளவில் இதில் இருக்கின்றன அதோடு வால்நட் பருப்பில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் நிறைந்து காணப்படுகின்றது.
 
வால்நட்டில் உள்ள ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் அமிலம் ஞாபக மறதியை போக்குவதுடன் நமது நினைவுத் திறனையும் அதிகரிக்கும் அடுத்து முக்கியமாக புற்று நோயை தடுக்கின்றது.
 
பருவமடைந்த பெண்கள் அனைவரையும் அச்சுறுத்தும் ஒரு நோயாக மார்பக புற்றுநோய் இருக்கின்றது. தினமும் ஐந்து வால்நட் பருப்புகளை சாப்பிடுவதன் மூலம் பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் வராமல் தடுக்க முடியும்.
 
ஆண்களுக்கு தலையில் வழுக்கை ஏற்படும் வாய்ப்புகளை குறைகிறது எனவே தலை முடி சம்பந்தப்பட்ட பிரச்சினைகளை சந்திப்பவர்கள் சாப்பிடுவது மிகவும் நல்லது.
 
வால்நட்டில் உள்ள மெலடோனின் இன்னும் ஊட்டச்சத்து, நமது மூளைக்கு நல்ல ஓய்வு கொடுத்து நல்ல ஆழ்ந்த உறக்கத்திற்கு வழிவகை செய்கின்றது. இதனால் மன அழுத்தமும் குறைகின்றது.
 
இதயத்திற்கு நல்லது வால்நட். ரத்த நாளங்களின் செயல்பாட்டை மேம்படுத்தி இதய ஆரோக்கியம் இது வழிவகுக்கின்றது. இந்த பருப்புகளில் உள்ள வைட்டமின் ஈ பாதுகாப்பிற்கு மிகவும் உதவுகின்றது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்