கொய்யா பழத்தில் இரண்டு வகைகள் உள்ளன. அவை, வெள்ளை, சிவப்பு கொய்யா போன்றவையாகும். இந்த இரண்டு பழங்களும் அதன் நிறத்தில் மட்டுமல்ல, மருத்துவ குணங்களிலும் பல வேறுபாடுகள் உள்ளன.
கொய்யா ஜீரண உறுப்புகளை வலுப்படுத்தும் ஆற்றல் கொண்டது. கொய்யா பழத்தை சாப்பிடுவதன் மூலம் வயிறு, குடல், இரைப்பை, கல்லீரல் மற்றும் மண்ணீரல் போன்றவை வலுவடையும்.
கொய்யாப்பழத்தில் மிகுதியாக இருக்கும் பொட்டாசியம், வைட்டமின் சி போன்ற தாதுக்கள் மாரடைப்பு ஏற்படுவதை தடுக்க உதவுகின்றன. மேலும் உடலில் உள்ள நஞ்சுகளை அகற்றுவது, பைட்டோநியூட்ரியன்ஸ், ஃபிளவனாய்ட் போன்றவற்றின் மூலம் புற்றுநோய் வராமல் தடுக்க உதவுகிறது.
பொதுவாக சர்க்கரை நோய் உள்ளவர்கள் இனிப்பு மிகுந்த பழங்களை சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும் என சொல்வார்கள். ஆனால், கொய்யா பழத்தைச் சர்க்கரை நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம். டைப்-2 நீரிழிவு நோய் வராமல் தடுப்பதற்கும் கொய்யாப்பழம் உதவுகிறது.