பூண்டு பால் செய்ய தேவையான பொருட்கள்: பசும்பால் 200 மில்லி, தண்ணீர் அரை டம்ளர், பூண்டு பல் 7, மஞ்சள் தூள் கால் டீஸ்பூன், மிளகு தூள் கால் டீஸ்பூன், பனங்கற்கண்டு தேவையான அளவு.
முதலில் பாலில் தண்ணீரை கலந்து நன்றாக கொதிக்க வைக்கவும். பிறகு பூண்டு பல்லை தோலுரித்து பாலில் போட்டு வேகவிடவும். பூண்டு பற்கள் வெந்த பிறகு அதனை இறக்கி மஞ்சள் தூள், மிளகுத்தூள் சேர்க்கவும். பிறகு தேவையான அளவு பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க வேண்டும்.