அடர்த்தியான கூந்தலுக்கு உருளைக்கிழங்கு சாற்றை பயன்படுத்தி எவ்வாறு அடர்த்தியான கூந்தலை பெறுவது என்பதை பார்ப்போம்.
தவறான உணவு பழக்கம், தண்ணீர், இரசாயணம், சுற்றுச்சூழல் மாசு ஆகியவற்றால் முடி உதிர்வு ஏற்படும். மேலும் இரசாயணம் மிகுந்த ஹேர் ப்ராடக்ட்களை பயன்படுத்தும்போது மேலும் கூந்தல் உடைந்து, முடி கொட்ட ஆரம்பிக்கும்.
உருளைக்கிழங்கு சாறு முடி வளர்ச்சியை தூண்ட கூடியது. முடி வளர்ச்சிக்கு இது சிறந்த தீர்வு. சருமம் மற்றும் கூந்தலின் வளர்ச்சிக்கு கொலாஜன் மிகவும் தேவையான ஒன்று. உருளைக்கிழங்கில் பல்வேறு வகையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கிறது.
உருளைக்கிழங்கு சாறு எடுத்து ஸ்கால்பில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் கூந்தல் வளர்ச்சியடையும். கூந்தலில் அதிகபடியான எண்ணெய் இருந்தாலும் கூந்தல் உடையும். உருளைக்கிழங்கில் அதிகபடியான ஸ்டார்ச் இருப்பதால் கூந்தல் மற்றும் ஸ்கால்பிற்கு மிகவும் நல்லது.
கூந்தலின் அடர்த்தி குறைந்துவிட்டால், உருளைக்கிழங்கு சாறு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து ஸ்கால்பில் தடவி வந்தால் வறட்சி நீங்கிவிடும். முடி உதிர்வு பிரச்சனை இருந்தால் மயிர்கால்களில் படும்படி உருளைக்கிழங்கு சாற்றை தடவி வரலாம்.
உருளைக்கிழங்கு சாறு எடுத்து ஸ்காப்பில் 15 நிமிடங்கள் வரை நன்கு மசாஜ் செய்தால் இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை தூண்டும். கூந்தலில் தடவி ஊறியபின் வெதுவெதுப்பான நீரில் தலைமுடியை அலச வேண்டும். மாதம் மூன்று முறை இப்படி செய்து வந்தால் முடி உதிர்வு நின்றுவிடும்.
தயாரிப்பு முறை:
உருளைக்கிழங்கை நன்கு கழுவி, அதன் தோலை நீக்கி துருவி, பின்பு துருவிய உருளைக்கிழங்கை கையால் நன்கு பிழிந்து சாறு எடுத்து கொள்ளவும். உருளைக்கிழங்கை நறுக்கி மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். ஒரு மெல்லிசான துணியால் அரைத்து வைத்தவற்றை வடிகட்டி சாறு எடுத்து ஸ்கால்பில் தடவி கொள்ளவும். தொடர்ச்சியாக இப்படி செய்து வந்தால் முடி அடர்த்தியாக வளரும்.