புடலங்காயில் இளத்தல், கொத்துப்புடல், நாய்ப்புடல், பன்றிப்புடல், பேய்புடல் என பல வகைகள் உள்ளது. இவற்றில் கொத்துப்புடல் மட்டுமே உணவாகப் பயன்படுகிறது.
புடலங்காயில் அதிக அளவு நார்சத்தினைக் கொண்டுள்ளது. இதனால் செரிமானம் நன்கு நடைபெற உதவுகிறது. மேலும் நார்சத்தானது ஊட்டச்சத்துக்களை உட்கிரகிக்க தூண்டுகிறது. மேலும் இக்காய் மலச்சிக்கலிருந்து நிவாரணம் அளிக்கிறது.
காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் புடலங்காயை கசாயம் வைத்து இரவில் குடிக்க காய்ச்சல் சரியாகும். புடலங்காயானது சுவாச பாதையில் உள்ள சளியினை நீக்கி சுவாச பாதையை சீரமைக்க உதவுகிறது. மேலும் இக்காய் சளி அழற்சி எதிர்ப்பு பண்பினை கொண்டது. அடர்த்தியான முடியை பெற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த புடலங்காய் அதிகம் சாப்பிடலாம்.
புடலங்காயில் நன்கு முற்றிய காயை உண்பது நல்லதல்ல. பிஞ்சு அல்லது நடுத்தர முதிர்ச்சியுள்ள காயையே பயன்படுத்த வேண்டும். புடலையின் உட்பகுதியில் நீண்ட குழாய் போன்று காணப்படும். அதில் உள்ள விதைகளை நீக்கி சதைப் பகுதியை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
நரம்புகளுக்கு புத்துணர்வு கொடுத்து ஞாபக சக்தியை அதிகரிக்கும். சருமத்திற்கு பளபளப்பைக் கொடுக்கும். விந்துவைக் கெட்டிப்படுத்தும். ஆண்மைக் கோளாறுகளைப் போக்கும். உடல் தளர்ச்சியைப் போக்கி வலு கொடுக்கும்.
பெண்களுக்கு உண்டாகும் வெள்ளைப் படுதலைக் குணப்படுத்தும். கருப்பைக் கோளாறுகளைப் போக்கும். கண் பார்வையைத் தூண்டும். இதில் நீர்ச்சத்து அதிகமிருப்பதால் உடலில் உள்ள தேவையற்ற உப்புநீரை வியர்வை, சிறுநீர் மூலம் வெளியேற்றும்.