புளிச்ச கீரையில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்...!

Webdunia
புளிச்ச கீரையில் இரும்புச் சத்துக்கள், வைட்டமின் ஏ, கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி உள்ளன. பார்வைக் கோளாறு, ரத்த சோகையைப் போக்கும். வயிற்றில் அமிலத்தன்மை குறையும்போது பசி இல்லாமல் போகிறது. புளிச்ச கீரை பசியை தூண்டும். நோய் எதிர்ப்பு  சக்தி உடையது.
புளிச்ச கீரையில் தாதுபொருட்களும், இரும்பு சத்துக்களும் அதிக அளவில் உள்ளன. இது தவிர வைட்டமின் சத்துக்களும் கணிசமான அளவு கலந்துள்ளன. எல்லாவிதமான வாத கோளாறுகளையும் குணப்படுத்தும் வல்லமை இந்த கீரைக்கு உண்டு என்பார்கள்.

புளிச்சக் கீரை கட்டிகளை ஆற்ற கூடியதும், பித்தத்தை போக்கவல்லதும், உடல் வலி, வீக்கத்தை குணமாக்கும் தன்மை கொண்டதும், பசியை தூண்டக் கூடியது.
 
புளிச்ச கீரையில் பல்வேறு மருத்துவ குணங்கள் உள்ளன. சமையலில் பயன்படுத்த கூடியது இது, அற்புதமான மூலிகையாக விளங்குகிறது.  மேல் பூச்சு மருந்தாகவும் பயன்படுகிறது.
உள் உறுப்புகளுக்கு புத்துணர்வு கொடுக்க கூடியது. வலி, வீக்கத்தை போக்கும். புண்களை ஆற்றக் கூடிய தன்மை கொண்டது.புளிச்ச கீரையில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. தோல், எலும்புகள் பாதிப்படைவதை தடுக்கிறது.
 
ரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. புளிச்ச கீரையை நன்றாக அரைத்து, பூசுவதால் கட்டிகள் விரைவில் கரையும். புளிச்ச கீரையின் பூக்களை பயன்படுத்தி இருமலுக்கான மருந்து தயாரிக்கலாம்.
 
பூக்களை நசுக்கி சாறு எடுக்கவும். ஒரு ஸ்பூன் சாறில், 2 சிட்டிகை மிளகுப் பொடி, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து கலக்கவும். இதை சாப்பிட இருமல் சரியாகும். சளியை கரைத்து வெளியேற்றும். சுவாச கோளாறை போக்குகிறது.
 
சொறி, சிரங்கு போன்ற சரும நோய் உள்ளவர்கள் இந்த கீரையை சட்னி செய்து உணவுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் விரைவில் குணம்  பெறலாம் என்பார்கள்.
 
காசநோயை குணமாக்கும் இந்த கீரை ரத்தத்தை சுத்திகரிப்பதிலும் முதலிடம் வகிக்கிறது. உடல் உஷ்ணத்தை எப்போதும் சீராக வைத்திருக்க உதவுகிறது. அதனால்தான் இந்தகீரையை உடலுக்கும், குடலுக்கும் வளமூட்டும் கீரை என்பார்கள்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்