எண்ணற்ற மருத்துவ குணங்கள் கொண்ட புளி !!

Webdunia
அறுசுவை உணவுகளில் ஒன்றுதான் புளிப்பு சுவை. புளியில் எண்ணற்ற நற்குணங்கள் அடங்கியுள்ளன. இந்தப் புளியானது தென்னிந்திய சமையலில் அதிக அளவில் பயன்படுத்த கூடிய ஒன்றாகும். 

கிராமபுறங்களில் இன்றளவிலும் புளியினை சிறந்த மலமிளக்கியாக பயன்படுத்துகின்றனர். இதில் உள்ள நார்ச்சத்து டார்டாரிக் அமிலம் மற்றும் பொட்டாசியம் ஆகியவை மலச்சிக்கலைப் போக்குகிறது.
 
புளிய மரத்தில் உள்ள புளி மற்றும் அதனுடைய இலைகள் ஆகியவை அழற்சியை எதிர்க்கும் பண்புகள் உடையது.
 
நீண்டநாள் உள்ள அலர்ஜியை  சரிசெய்ய புளியினை கொண்டு டீ போட்டு அதனுடன் சிறிதளவு தேன் கலந்து குடித்து வருவதன் மூலம் சரிசெய்யலாம்.
 
வெப்பமண்டல பகுதிகளில் ஏற்படக்கூடிய நிமோனியா, மலேரியா, வைரஸ் மற்றும் பூஞ்சை தொற்றுகள் ஆகிய தொற்று நோய்களுக்கு எதிராக செயல்படக்கூடியது. ஆகவே அனைவரும் தாராளமாக இந்த புளியை கிருமிநாசினியாக பயன்படுத்தலாம்.
 
ஒரு சில காரணங்களினால் சரும தொற்று அலர்ஜி போன்ற பிரச்சினைகள் ஏற்படுகின்றது. இது போன்ற பிரச்சனைகளை சரிசெய்வதற்கு புளி சிறந்தது. முகத்தில் அலர்ஜி மற்றும் பருக்கள் உள்ள இடங்களில் புளி சாற்றினை தடவி வருவதன் மூலமாக சருமத்தில் உள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்து விடும்.
 
கெட்ட கொலஸ்ட்ரால்கள் அனைத்தையும் கரைத்து இதயத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்கின்றது. மேலும் உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்துகின்றது. 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்