உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியினை அதிகரிக்க உதவும் முட்டைக்கோஸ் !!

முட்டைக்கோஸ் பச்சை, பழுப்பு, சிவப்பு என பல நிறங்களில் முட்டைக்கோஸ்கள் விளைகிறது.  பச்சை முட்டைக்கோஸ் இணையற்ற சத்துக்கள் கொண்டது. குறைந்த கலோரி ஆற்றல் வழங்கக் கூடியது. கொழுப்பும் குறைந்த அளவே உள்ளது.

முட்டைக்கோசில் கால்சியம் மற்றும் வைட்டமின் கே வளமாக உள்ளதால், இதை அடிக்கடி உணவில் சேர்த்து வரும் பொழுது, நம் எலும்புகளுக்கு வலுவை தருகிறது. இதில் இருக்கும் சத்துக்கள் நம் தசைகளையும், நரம்புகளையும் வழுவாக்கி நரம்பு தளர்ச்சி ஏற்படுவதை போக்கும்.
 
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் எளிதில் நீர்சத்தையும், உடல் பலத்தையும், ரத்தத்தில் அவசியமான சத்துக்களையும் இழந்து விடுகின்றனர். இப்படிப்பட்டவர்களுக்கு, முட்டைகோஸ் ஒரு சிறந்த உணவாக உள்ளது.
 
குறிப்பாக நோய் எதிர்ப் பொருட்களாக செயல்படுகின்றன. மார்பகம், தொண்டை, குடற் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படும். கெட்ட கொழுப்புகளான எல்.டி.எல். கொழுப்புகளை குறைக்கும்.
 
பொட்டாசியம், மாங்கனீசு, இரும்பு, மக்னீசியம் போன்ற தாதுஉப்புக்கள் முட்டைக்கோசில் உள்ளது. இதயத் துடிப்பு மற்றும் ரத்த அழுத்தத்தை சீராக வைப்பதிலும் பங்கெடுக்கும். முக்கியமான நோய் எதிர்ப்பொருளான 'வைட்டமின் சி', முட்டைக்கோசில் மிகுந்துள்ளது. தொடர்ச்சியாக 'வைட்டமின் சி' உடலில் சேர்த்துக் கொள்வது அதிகமான நோய் எதிர்ப்பு சக்தியை வழங்கும்.
 
வைட்டமின் பி-5, வைட்டமின் பி-6, வைட்டமின் பி-1 போன்ற அத்தியாவசிய வைட்டமின்களும் முட்டைக்கோஸில் நிறைந்துள்ளது. இவை உணர்வுக்கும், இதர உடற்செயல்பாட்டிற்கும் உறுதுணை செய்யக்கூடியவை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்