மாதவிடாய் காலங்களில் கடைப்பிடிக்க வேண்டிய சில குறிப்புகள் !!

Webdunia
திங்கள், 13 ஜூன் 2022 (10:21 IST)
மாதவிடாய் ஏற்படுவது எல்லா பெண்களுக்கும் பொதுவானது தான் என்றாலும், ஒவ்வொரு பெண்ணின் மாதவிடாய் சுழற்சியும், உடல் அமைப்பு மற்றும் மாதவிடாய் கால வலிகளும் வேறுமாதிரியாகத் தான் இருக்கும்.


மாதவிடாய் காலத்தில் தான் பெண்கள் ஆரோக்கியமான உணவுகளைச் சாப்பிட வேண்டும். மாதவிடாய் ஆரோக்கியத்தை விரும்புபவர், மாதவிடாய் சமயத்தில் சில உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும்.

ஆரோக்கியமான உணவுகள் மற்றும் நிறைய தண்ணீர் நிறைந்த பானங்களை எடுத்துக் கொள்வது மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் விரும்பத்தகாத அறிகுறிகளைத் தடுக்க உதவும் எளிதான வழிகளில் ஒன்றாகும்.

மாதவிடாய் காலத்தில் ஏற்படும் ரத்தப் போக்கு மற்றும் அதனால் ஏற்படும் சோர்வு போன்றவற்றைச் சரிசெய்ய மாதவிடாய் சமயத்தில் உங்கள் உணவில் கட்டாயம் சேர்க்க வேண்டிய சில சத்தான உணவுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

காய்கறிகளை சாப்பிடுவதுடன் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வண்ணங்களில் இருக்கும் காய்கறிகளைச் சாப்பிடுவது நல்லது. மூளையிலிருந்து சுரக்கும் ஹார்மோன்கள் செயல்பாட்டால்தான் மாதம்தோறும் சரியாக மாதவிடாய் சுழற்சி நடக்கும். சில சமயங்களில் பருவமடைந்த சில வருடங்களுக்குக்கூட மூளையில் ஹார்மோன்கள் சுரப்பு முறையாக நடக்காது. அதனால்தான் முறையற்ற மாதவிடாய் ஏற்படும். முறையாக மாதாமாதம் வருவதற்கு மூளையின் செயல்பாடு முறையாக நடைபெற வேண்டும்.

ஒரு நாளைக்கு ஐந்து அல்லது ஆறு நாப்கின்களுக்கு மேல் மாற்றினாலோ, கட்டி கட்டியாக ரத்தப்போக்கு இருந்தாலோ அது அதிக ரத்தப்போக்கு என்று அர்த்தம். அதிக ரத்தப்போக்கு இருப்பவர்களுக்கு எப்போதும் சோர்வு, ரத்தச்சோகை போன்ற பிரச்னைகள் வரலாம்.

பல பெண்கள் அதிக ரத்தப்போக்கைக் கண்டுகொள்ளாமல், கழிவு ரத்தம்தானே என்று அலட்சியமாக இருப்பதே இந்தியாவில் ரத்தச்சோகை அதிகமாக உள்ளதற்கு முக்கிய காரணம். எனவே, அதிக ரத்தப்போக்கு ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவரை அணுகி, அதன் காரணத்தைக் கண்டுபிடித்து சிகிச்சை பெற வேண்டும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்