லிச்சி பழத்தில் நிறைய அத்தியாவசியமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. வைட்டமின் சி, கே, பி 1, பி 2, பி 3, பி 6 மற்றும் ஈ ஆகிய ஊட்டச்சத்துக்கள் இதில் காணப்படுகிறது.
கால்சியம், சோடியம், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ், செலினியம் மற்றும் மெக்னீசியம் போன்ற தாதுக்கள், பாலிபினால்கள் மற்றும் கரோட்டினாய்டுகளும் இதில் காணப்படுகிறது. இதில் உள்ள வைட்டமின் சி, உடலின் இரும்புச் சத்தை உறிஞ்சும் திறனை மேம்படுத்தி ரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
உடலை நீரேற்றமாக வைத்திருக்கும் பழங்களின் பட்டியலில் லிச்சி மிக முக்கிய இடம் வகிக்கிறது. உடல் எடையை குறைக்கவும் இது உதவுகிறது. சோர்வில் இருந்து உடலையும், மனதையும் உற்சாகப்படுத்தும் இயற்கை மருந்தாகவும் பயன்படுகிறது.