ரத்த கட்டு குணமாக செய்யப்படும் சில இயற்கை வைத்திய முறைகள் !!

Webdunia
நமது உடலில் ஏதேனும் ஒரு பகுதியில் அடிபடும் போது வெளிப்புற தோல் பகுதியின் அடியில் ரத்தம் உறைந்து ரத்த கட்டு ஏற்படுகிறது. இதை குணமாக்கும் சில இயற்கை வைத்திய முறைகளைப் பற்றி பார்ப்போம்.

ரத்த கட்டு அறிகுறிகள் அடிபட்ட பகுதியில் உள்ள தோலுக்கு அடியில் ரத்தம் உராய்ந்து அந்த இடத்தில் சிறிய புடைப்பு போல் இருக்கும். ரத்தம் உறைந்திருப்பதை சில சமயங்களில் வெறுங்கண்களால் பார்க்க முடியும். நாட்கள் செல்ல செல்ல அந்த இடம் கருப்பு நிறமாக மாறும். 
 
ரத்த கட்டு குணமாக நாம் உணவில் அன்றாடம் பயன்படுத்தும் புளியை சிறிது எடுத்துக்கொண்டு, அதனுடன் சிறியளவு கல்லுப்பை சேர்த்து கலந்து, பிசைந்து பசை  போல் ஆக்கி அதை ரத்த கட்டு ஏற்பட்ட இடத்தில் பற்று போட்டு வர ரத்த கட்டு சிறிது சிறிதாக நீங்கும்.
 
மஞ்சள் தரமான மஞ்சள் பொடியை சிறிது வெந்நீர் விட்டு கலந்து, அந்த கலவையை ரத்த கட்டு ஏற்பட்ட இடங்களில் களிம்பு போல் வைத்து, ஒரு வெள்ளை  துணியால் கட்டு போட வேண்டும். இதை தினமும் செய்து வர விரைவில் ரத்த கட்டு சரியாகும். 
 
ஆமணக்கு, நொச்சி ஆமணக்கு மற்றும் நொச்சி இலைகளை சிறிது பறித்து விளக்கெண்ணெயில் வதக்கி, அந்த இலைகளை ஒரு வெள்ளை துணியால் கட்டி  பாதிக்கப்பட்ட இடங்களில் ஒத்தடம் கொடுத்து வர ரத்த கட்டு கரையும். 
 
அமுக்கிராங் சூரணம் நாட்டு மருந்து கடைகளில் இந்த அமுக்கிராங் சூரணம் கிடைக்கும். இதை சூடான பசும்பாலில் ஒரு தேக்கரண்டி அளவு கலந்து காலை மாலை  குடித்து வர ரத்த கட்டு விரைவில் நீங்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்