மருதாணி இலைகளை அரைத்து வைத்துக்கொள்வதால் இத்தனை நன்மைகளா...?

Webdunia
மருதாணியின் இலைகள், பட்டை, மலர், கனிகள் போன்றவை மருத்துவ பயன்களை கொண்டது. கைகளுக்கு அடிக்கடி மருதாணி போட்டு வர மனநோய் ஏற்படுவது குறையும். மருதாணி இட்டுக் கொள்வதால் நகங்களுக்கு எந்த நோயும் வராமல் பாதுகாக்கலாம். 

மருதாணி இலைகல் தசை இறுக்கும் தன்மை கொண்டது. அதிக இரத்தப்போக்கினை தடுக்கும். மாதவிடாய் சுலமாய் இருக்க உதவும் பெண்களின் வெள்ளைப்படுதல் மற்றும் மாதவிடாயில் அதிகப்படியான இரத்தப்போக்கு ஆகியவற்றை தீர்க்கும்.
 
கால் எரிச்சலைத் தடுக்க இலைகலை அரைத்து பசையாக வைப்பதின் மூலம் அவற்றை சரிசெய்யலாம். உள்ளங்காலில் ஆணி ஏற்பட்டிருந்தால் மருதாணி இலையுடன் சிறிது வசம்பு, மஞ்சள் கற்பூரம் சேர்த்து அரைத்து ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து கட்டி வர ஒரு வாரத்தில் குணமாகும்.
 
மருதாணி இலை கிருமி நாசினி, கண்ணுக்குப் புலப்படாத கிருமிகளை அழிக்க வல்லது. நகசுத்தி வராமல் தடுக்கும். புண்ணை ஆற்றவும் நல்ல மருந்து. மருதாணி இலையை அரைத்து கைகளுக்கு வைத்து வர, உடல் வெப்பம் தணியும்.
 
மருதாணி இட்டுக் கொள்வதால் சிலருக்கு சளி பிடித்துவிடும். இதற்கு மருதாணி இலைகளை அரைக்கும்போது கூடவே 8 நொச்சொ இலைகளை சேர்த்து அரைத்து  வைத்துக் கொள்ளலாம்.
 
ஆறாத வாய்ப்புண் அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம். அரைத்து அம்மைப் புண்களுக்குப்  பூசலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்