பீட்ரூட் ஜூஸ் குடித்து வருவதால் இத்தனை நன்மைகளா...!!

Webdunia
திங்கள், 20 ஜூன் 2022 (17:43 IST)
பீட்ரூட் ஜூஸ் குடிப்பதால் இரத்தத்தை சுத்திகரித்து இரத்த ஓட்டத்தை சீராக வைக்க உதவுகிறது. தினமும் பீட்ரூட் ஜூஸ் குடித்து வந்தால் முதுமையை தள்ளி வைத்து இளமையாக இருக்கலாம்.


சருமம் மற்றும் தோளில் அரிப்பு உள்ளவர்கள் பீட்ரூட் சாறுடன் சிறிதளவு படிகார பொடி சேர்த்து கலந்து அரிப்பு ஏற்படும் இடத்தில் தடவி வந்தால் அரிப்பு எளிதில் குணமாகும்.

பீட்ரூட்டில் ஆக்ஸைட்கள் அதிகம் இருப்பதால் சிறுநீரகத்தில் கற்கள் உண்டாக வாய்ப்புகள் அதிகம். அல்சர் உள்ளவர்கள் வாரத்திற்கு மூன்று முறை குடித்து வந்தால் அல்சர் விரைவில் குணமாகும்.

பீட்ரூட்டை நன்கு அரைத்து குடிக்கலாம். இதை குடிக்கும் பொழுது சுவை பிடிக்காதவர்கள் இதனுடன் ஆப்பிள் ஆரஞ்சு இஞ்சு இதில் ஏதாவது ஒன்றை சேர்த்து அரைத்து குடித்து வந்தால் உடலுக்கு ஆரோக்கியமாக இருக்கும்.

இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடித்தால் மேலும் இரத்த அழுத்தத்தை குறைத்து விடும். உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்ற இது உதவுகிறது.

சிறுநீரில் கற்கள் உள்ளவர்கள் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதை தவிர்க்கவும் இது இயற்கையாகவே கற்களை ஏற்படுத்தும் மேலும் கற்கள் ஏற்பட்டு வலி வர வாய்ப்புகள் உள்ளதால் பீட்ரூட் ஜூஸ் குடிப்பதை தவிர்க்கவும்.

முகத்தில் அதிகப்படியான அழுக்குகள் படிவதால் சருமத்தில் பருக்கள் மற்றும் முக சுருக்கம் ஏற்படுகிறது. இதை சரி செய்ய பீட்ரூட் பெரிதும் உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்