தலைமுடி சார்ந்த பிரச்சனைகளை குணமாக்கும் புடலங்காய் எப்படி...?

புதன், 23 மார்ச் 2022 (10:53 IST)
தலைமுடி கொட்டுதல், இள நரை, பொடுகு, வழுக்கை ஏற்படுவது போன்ற தலைமுடி சார்ந்த பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் குணமாகும்.


புடலங்காய் சாறினை தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு பிரச்சனைகள் சரியாகும்.

புடலங்காய் உடல் உஷ்ணத்தை குறைத்து உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ளும். எனவே புடலங்காயை சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும்.

புடலங்காய் கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுத்தன்மை முற்றிலும் நீங்கி கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.

புடலங்காய் சேர்க்கப்பட்ட உணவுகளை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் வயிற்றுபோக்கு குணமாகும். புடலங்காயை பொரியல் அல்லது கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால்,உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் அடிக்கடி புடலங்காய் பொரியல் அல்லது கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக்குகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்