எண்ணற்ற மருத்துவ குணங்களை உள்ளடக்கிய புடலங்காய் !!

செவ்வாய், 15 பிப்ரவரி 2022 (16:41 IST)
தினமும் சிறிதளவு புடலங்காயை பக்குவப்படுத்தி சாப்பிட்டு வந்தால் ஜுரம் நீங்கும். மேலும் இதில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால், மலச்சிக்கலைப் போக்கும். மூலநோய்க் காரர்களுக்கு புடலங்காய் சிறந்த மருந்தாகும்.


தலைமுடி சார்ந்த பிரச்சனை இருப்பவர்கள் அடிக்கடி புடலங்காயை உணவில் சேர்த்து சாப்பிட்டு வந்தால் தலைமுடி சார்ந்த பிரச்சனைகள் குணமாகும்.

புடலங்காய் சாறினை தலையில் தேய்த்து அரைமணி நேரம் கழித்து குளித்து வந்தால் பொடுகு பிரச்சனைகள் சரியாகும்.

கல்லீரல் நாம் சாப்பிடும் உணவுகளில் இருக்கும் நச்சுக்களை முறித்து, உடலுக்கு நன்மை செய்கிறது. நாம் புடலங்காய் கொண்டு செய்யப்படும் உணவுகளை சாப்பிட்டு வந்தால் கல்லீரலில் படிந்திருக்கும் நச்சுத்தன்மை முற்றிலும் நீங்கி கல்லீரல் ஆரோக்கியம் மேம்படும்.

புடலங்காயை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் இரத்த அழுத்தம் வெகுவாக குறைந்து, இதயம் சம்பந்தமான நோய்கள் ஏற்படாமல் பாதுக்கிறது.

புடலங்காயை சாப்பிட்டு வந்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் பெருக்கம் ஏற்பட்டு மலட்டுத்தன்மை நீங்கும்.

நீரிழிவு நோய் உள்ளவர்கள் அடிக்கடி புடலங்காய் பொரியல் அல்லது கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக்குகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்