அற்புத மருத்துவ குணங்களை கொண்ட சித்தரத்தை !!

Webdunia
இஞ்சி குடும்பத்தை சேர்ந்த சித்தரத்தை காரச் சுவை கொண்டது. தொண்டையில் சேரும் கபத்தை வெளியேற்றும் சக்தி சித்தரத்தைக்கு உள்ளது.

சித்தரத்தையை பொடி செய்து தினமும் காலையில் சாப்பிட்டு தண்ணீர் குடித்து வந்தால் நல்ல பசி எடுக்கும். சித்தரத்தை பொடியுடன் கற்கண்டைக் தூள் சேர்த்து அதை பாலில் கலந்து தினமும் குடித்து வந்தால் ஜுரம் மற்றும் சுவாச பாதிப்புகள் சரியாகும்.
 
ஆஸ்துமா பாதிப்பு உள்ளவர்கள் சித்தரத்தை, அதிமதுரம், தாளிசபத்திரி, திப்பிலி மற்றும் மிளகு ஆகியவற்றை லேசாக வறுத்து பொடி செய்து வைத்துக்கொள்ளவும். இதில் சிறிதளவு எடுத்து, தேனில் குழைத்து தினமும் சாப்பிட்டுவர ஆஸ்துமா பாதிப்பு விலகும்.
 
சித்தரத்தையுடன், சிறிதளவு பனங்கற்கண்டு கலந்து சாப்பிட்டால் உடல்சூடு காரணமாக வரும் இருமல் நின்றுவிடும். குழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்படும்போது, சிறிதளவு சித்தரத்தையை தூளாக்கி, அரை தேக்கரண்டி தேனில் குழைத்து கொடுக்கவேண்டும்.
 
சிலருக்கு வாகனங்களில் பயணம் செய்யும்போது, வாந்தி ஏற்படும். அந்த தொந்தரவு இருப்பவர்கள் பயணம் செய்யும்போது சிறு துண்டு சித்தரத்தையை வாயில் இட்டு சுவைத்துக்கொண்டிருந்தால் வாந்தி வராது.
 
சித்தரத்தையை நன்றாக அரைத்து தலைஉச்சியில் வைத்துக் கொண்டால் சீதளம் தணியும். 10 கிராம் சித்தரத்தையுடன் பனைவெல்லம் சேர்த்து கஷாயமாக்கிக் குடித்தால் நெஞ்சில் கட்டியிருக்கும் கோழை கரைந்து வெளியேறும்.
 
சித்தரத்தையுடன் தயிர் சேர்த்து நன்றாக அரைத்து சொறி, படை, சிரங்குகள் மீது போட்டால் அவை விரைவில் குணமாகும். சித்தரத்தை, தாமரைப்பூ இரண்டையும் சம அளவு எடுத்துப் பொடி செய்து, ஒரு ஸ்பூன் அளவுக்குத் தினமும் அதிகாலையில் சாப்பிட்டுவந்தால் மாரடைப்பு வராமல் தடுக்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்