வயிற்று கோளாறு பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும் சீந்தில் கொடி !!

Webdunia
சர்க்கரை நோயாளிகளுக்கும், எய்ட்ஸ் நோயாளிகளுக்கும் நல்ல மருந்து. இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது.

சீந்தில் கொடியை பொடி செய்து தினமும் 5 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய் கட்டுப்படும். சீந்தில் கொடி, சீரகம் இரண்டையும் சமஅளவு எடுத்து சாப்பிட்டு வந்தால் ஒற்றை தலைவலி நீங்கும்.
 
மூட்டு வலி மற்றும் வாத நோய் உள்ளவர்கள் சீந்தில் கொடி, தழுதாழை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து தினமும் 2 கிராம் அளவு சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
 
நீரிழிவு, இருமல், மண்ணீரல் கோளாறுகள், கபம், வாந்தி, காமாலை, ஜுரம், பலவீனம், அஜீரணம், வாதநோய், கிரந்தி போன்ற நோய்களால் பாதிக்கபட்டவர்களுக்கு சீந்திலை கஷாயம் போல செய்து சாப்பிட்டால் பூரண குணம் பெறலாம்.
 
சீந்தில் கொடியிலிருந்து தயாரிக்கப்படும் மருந்து சிறுநீரக செயல் இழப்பு, கல்லீரல் கோளாறு ஆகிய நோய்களுக்கு பலனளிக்கிறது. சீந்தில் மூலிகை, உடலின் வெப்பத்தைத் தணிக்கும் ஆற்றல் உள்ளது. இதனால் நாள்பட்ட காய்ச்சலில் இருந்து விடுபட உதவுகிறது.
 
அடிக்கடி ஏற்படும் செரிமான பிரச்சனைகளுக்கு சீந்தில் மூலிகை தீர்வு அளிக்கிறது. வயிற்று கோளாறு பிரச்சனைகளை தீர்க்க ஆயுர்வேதத்தில் சீந்தில் கொடி பயன்படுத்தப்படுகிறது. சீந்தில் கொடி அடிக்கடி வரும் காய்ச்சலுக்கு சிறந்த மூலிகை மருந்தாக விளங்குகிறது.
 
சீந்தில் பொடி ஜீரண சக்தியை தூண்டும் தன்மை கொண்டது. மேலும் மலச்சிக்கலை சரி செய்யும். அரை கிராம் சீந்தில் பொடியை நெல்லிக்காயுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
 
சீந்தில் பொடியை நீரில் கொதிக்க வைத்து அதனை கண்களின் மேல் தடவி வந்தால், கண் பார்வை தெளிவடையும். சீந்தில் இலையை அனலில் இட்டு வாட்டி, இளஞ்சூட்டோடு புண்களின் மேல் போட்டுவர வீக்கம் கரைந்து வலி குறையும். புண்களும் ஆறிவிடும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்