மூக்கிரட்டை மூலிகையின் அற்புத மருத்துவ பலன்கள் !!

மூக்கிரட்டை செடி, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளின் கழிவுகளை, முழுவதும் வெளியேற்றி, மனிதர்களின் உடல் நலம் காக்கும் வல்லமை பெற்றதாகத் திகழ்கிறது.

மூக்கிரட்டை உடலில் இறங்கும்போது, அங்கே, வாத வியாதிகள் எல்லாம், அடங்கி, வாதம் உடலில் சீராகும். இரத்த சோகையால் ஏற்படும் உடல் வீக்கம், மூச்சிரைப்பைப் போக்க, கல்லீரல், மஞ்சள் காமாலை பாதித்தவர்களின் வயிற்று உப்புசம் குறைந்து நச்சு நீர் வெளியேற, மூக்கிரட்டை உதவி செய்யும்.
 
புற்று நோய்கள் புற்று வியாதிகளை ஏற்படுத்தும் நச்சுக் கிருமிகளை அழிக்கும், தொற்று வியாதிகளின் பாதிப்பை சரி செய்யும், உடல் திசுக்களை சரி செய்து, உடலில் ஏற்படும் முதுமைத் தன்மையை போக்கி, உடல் இளமையை தக்க வைக்கும்.
 
மூக்கிரட்டை சமூலம் எனும் முழுச் செடியையும் உலர்த்தி, தூளாக்கி, தினமும் இரு வேளை, சாப்பிட்டு வர, மலச்சிக்கல் நீங்கி உடல் புத்துணர்வாகி, இளமைப்பொலிவுடன் காணப்படும்.
 
மூக்கிரட்டை இலைகளை சுத்தம் செய்து சமைத்து சாப்பிட்டு வர, சுவாச பாதிப்புகள் சரியாகும். மூக்கிரட்டை வேர்கள் சற்று நீளமாக, சிறிய மரவள்ளிக் கிழங்கு போல காணப்படும். இரத்தச் சோகை, இதய பாதிப்புகள் போன்ற வியாதிகளுக்கு, சிறந்த மருந்தாகிறது.
 
மூக்கிரட்டை வேரை சற்று இடித்து, விளக்கெண்ணெய்யில் இட்டு காய்ச்சி, காலையில் வெறும் வயிற்றில் பருகி வர, வயிற்றுப் போக்கு ஏற்படும். இதன் மூலம், உடலில் சேர்ந்து இருந்த நச்சு நீர், நச்சுக்கிருமிகள் யாவும் மலத்துடன் வெளியேறி விடும்.
 
உடலில் வியாதிகளால் ஏற்பட்ட நச்சு நீரால், சளியும், மூச்சுத் திணறலும் ஏற்பட்டு, அவை தினசரி இயல்பு வாழ்க்கையை பாதிக்கும். இதை சரி செய்ய, முன் சொன்ன முறையில் காய்ச்சிய மூக்கிரட்டை வேர் நீரில், சிறிது மிளகுத்தூள் கலந்து பருக, மூச்சுத் திணறல் பாதிப்புகள் சரியாகி விடும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்