சப்போட்டாவில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், உடலை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. உடல் எடையை குறைக்க முயற்சிப்பவர்களுக்கு ஒரு நல்ல தேர்வு. இதய நோய் அபாயத்தைக் குறைக்கவும் உதவுகின்றன.
சப்போட்டா ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பொட்டாசியம், மெக்னீசியம் மற்றும் துத்தநாகம் போன்ற தாதுக்கள் நிறைந்த பழமாகும். முடிக்கு நன்மை பயக்கும் வைட்டமின்கள் ஏ, சி மற்றும் ஈ இதில் உள்ளது.
சப்போட்டா பழம் கர்ப்பிணிகள் சாப்பிடக்கூடிய சுவையான மற்றும் சத்தான பழம். மேலும் இது குழந்தையின் கண்கள் மற்றும் தோலின் வளர்ச்சிக்கு வைட்டமின் ஏ முக்கியமானது. வைட்டமின் சி குழந்தையின் எலும்புகள், பற்கள் மற்றும் திசுக்களின் வளர்ச்சிக்கு உதவுகிறது.