சரும ஆரோக்கிய நன்மைகளை கொண்ட ரோஸ் வாட்டர் !!

Webdunia
திங்கள், 10 ஜனவரி 2022 (14:22 IST)
அழகை அதிகரிக்க ஒவ்வொருவரும் அதிக அளவு அக்கறை எடுத்துக் கொள்வோம். அப்படி அழகை அதிகரிக்கவும், பாதுகாக்கவும் பயன்படும் பொருட்களில் ஒன்று தான் ரோஸ் வாட்டர்.

ரோஜா இதழ்களை நீரில் கொதிக்கவைத்து வடிகட்டி தயாரிக்கப்படும் ரோஸ் வாட்டரில் பல ஆரோக்கிய நன்மைகள் கொண்டது. இதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் சருமத்தை பாதுகாக்கும்.
 
ரோஸ் வாட்டரில் சிறிது சூடத்தைப் போட்டு, அதனைக் கொண்டு நாள் முழுவதும் பலமுறை சருமத்தை துடைத்து எடுத்தால், சருமத்தில் உள்ள அதிகப்படியான எண்ணெய் பசை நீங்கி, சருமம் பொலிவோடு காணப்படும். இல்லாவிட்டால், ரோஸ் வாட்டரில் புதினா சாற்றை கலந்து, இரவு முழுவதும் ஊற வைத்து, அதனைக் கொண்டு முகத்தை துடைத்து எடுத்தால் பருக்கள் நீங்கும்.
 
காட்டன் பஞ்சுவில் ரோஸ் வாட்டரை நனைத்து கண்களின் புருவம், அடிப் பகுதியில் தடவுவதன் மூலம் கண் சோர்வை போக்கலாம்.
 
ரோஸ் வாட்டர் அலர்ஜி எதிர்ப்பு பண்புகளை கொண்டது. சரும எரிச்சல், சருமத் தடிப்புகள், கண்கள் சிவத்தல், வீக்கம் அடைதல் போன்ற பிரச்சனைகளுக்கு நிவாரணம் தரும். ரோஸ் வாட்டரை சருமத்தில் தடவுவதன் மூலம் சரும செல்கள் வலுப்பெறும்.
 
ஒரு பவுலில் ஒரு ஸ்பூன் கிராம்பு தூள், ஒரு ஸ்பூன் ரோஸிவ் வாட்டர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். இந்த கலவையை இரவில் தூங்குவதற்கு முன்பு முகத்தில் பருக்கள் உள்ள இடத்தில தடவ வேண்டும். மறுநாள் காலை குளிர்ந்த நீரால் முகத்தை கழுவுங்கள். இவ்வாறு வாரத்திற்கு இரண்டுமுறை செய்துவந்தால் முகத்தில் உள்ள பருக்கள் மறைந்துவிடும்.
 
தினமும் குளிக்கும்போது தண்ணீரில் சிறிதளவு ரோஸ் வாட்டரை கலந்து குளித்து வந்தால் சருமத்திற்கு நல்ல பொலிவை கொடுக்கும். வறட்சியான சருமம் உள்ளவர்கள் அந்த ரோஸ் வாட்டர் பயன்படுத்தினால், நல்ல மிருதுவான சருமத்தை பெறலாம்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்