முடி உதிர்வை தடுத்து, கருமையாக வளர இயற்கையான முறையில் தயாரிக்கப்படும் எண்ணெய்கள்!

Webdunia
கரிசலாங்கண்ணி இலையை அரைத்து சிறு, சிறு உருண்டைகளாக்கி தேங்காய் எண்ணெயை காய வைத்து அதில் போட்டு சிடு  சிடுப்பு அடக்கியதும் வடிகட்டி, இந்த எண்ணெயைத் தலை முடிக்கு தடவி வந்தால் முடி உதிர்வது நீங்கும். முடியும்  கருமையாக வளரும்.


 
 
* மருதோன்றிப் பூவை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி இந்த எண்ணெயைத் தலைக்கு தடவி வந்தால் உடல் உஷ்ணம்  குறையும். தீராத தலைவலி குணமாவதுடன் முடியும் நன்றாக வளரும்.
 
* நெல்லிக்காயை வெயிலில் காய வைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் காய்ச்சி வடிகட்டி தலைக்குத் தடவி வர  அல்லது தலையில் ஊறியதும் குளித்தால் முடி செழித்து வளரும். முடியும் உதிராது. இளநரையும் சிறிது சிறிதாக மறையும்.
 
* கடுக்காய்த் தூளை தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து அந்த எண்ணெயைத் தலையில் தடவி வர செம்பட்டை முடி நாற்பது  நாட்களில் கருமையாக மாரும்.
 
* சிறு வெங்காயத்தை சிறிது கல் உப்புடன் தலையில் புழுவெட்டு ஏற்பட்ட இடத்தில் அழுத்தித் தேய்த்து வர அந்த இடத்தில்  முடிகள் முளைக்கும்.
 
* ஊமத்தை பிஞ்சு காயை நன்கு அரைத்து, தலையில் புழுவெட்டு ஏற்பட்ட இடத்தில் பூசிவர அந்த இடத்தில் முடிகள்  முளைக்கும்.
அடுத்த கட்டுரையில்