செரிமான இயக்கத்தை சீராக்க உதவும் உருளைக்கிழங்கு !!

Webdunia
செவ்வாய், 8 மார்ச் 2022 (16:53 IST)
உருளைக்கிழங்கில் நார்ச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது செரிமான இயக்கத்தை சீராக்கி மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. இரத்தத்தில் அதிக அளவு கொலஸ்ட்ரால் படிவதைத் தடுத்து, இதய நோய்களில் இருந்து பாதுகாக்கிறது.


இதயம் சீராக இயங்குவதற்கு பொட்டாசியம் உதவுகிறது. உருளைக்கிழங்கில் வளமான அளவில் பொட்டாசியம் இருப்பதால், உடலில் இருக்கும் நரம்புகளில் இறுக்கத்தன்மை ஏற்படாமல் தடுக்கிறது.

இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி, இதயத்திற்கு சரியான அளவில் இரத்தம் சென்று வர உதவுகிறது. இதயம் ஆரோக்கியமாக இயங்கவும், இதய நோய்கள் வராமல் தடுக்கவும், உருளைக்கிழங்கை வாரத்திற்கு இருமுறை சாப்பிடலாம்.

உருளைக்கிழங்கில் வளமான அளவில் நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளது. இரத்தத்தில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைப்பதற்கு நார்ச்சத்து உதவுகிறது. பொட்டாசியம் உயர் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த உதவுகிறது.

உருளைக்கிழங்கை வேகவைத்து பிசைந்து முகத்தில் தடவினால் சருமத்தில் இருக்கின்ற எண்ணெய் பசைகள் நீங்குவதோடு, முகப்பருக்கள், கரும்புள்ளிகளை நீக்கி முகத்தை பொலிவாக்குகிறது. முகத்தில் சுருக்கங்கள் ஏற்படுவத்தை தடுத்து, இளமைத் தோற்றத்தை பராமரிக்கிறது.

உருளைக்கிழங்கில் பொட்டாசியம் வளமான அளவில் உள்ளதால், இது சிறுநீரக செயல்பாட்டை மேம்படுத்த உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்