பல வியாதிகளை குணப்படுத்தும் சத்துக்கள் நிறைந்துள்ள அன்னாசி பழம் !!

Webdunia
புதன், 6 ஜூலை 2022 (11:14 IST)
அன்னாசி பழத்தில் வைட்டமின் B என்னும் உயிர்சத்து அதிக அளவில் உள்ளது, பல வியாதிகளை குணப்படுத்தும் அரிய மருந்தாகவும் அன்னாசி விளங்குகிறது.


உடலில் போதுமான ரத்தம் இல்லாமல் இருப்பவர்களுக்கு அன்னாசிப்பழம் ஒரு மிக சிறந்த டானிக் ஆகும்.

இரத்தத்தில் சர்க்கரையின் அளவை அதிகரிக்கும். அதனால் இதை சர்க்கரை நோயாளிகள் தவிர்ப்பது நல்லது.  ஆன்டிபயாடிக், வலிப்புத் தடுப்பு மருந்துகளைப் பயன்படுத்துவோர் அன்னாசி பழத்தை சாப்பிட கூடாது.

அன்னாசி பழத்தை அதிகம் சாப்பிட்டால் பற்களில் கறை உண்டாகும். பற்களின் மேலுள்ள எனாமலின் மீது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும்.

பெண்களுக்கு ஏற்படும் முக்கிய பிரச்சனைகளில் ஒன்று வெள்ளைப்படுதல் ஆகும். இந்த பிரச்சனை உள்ள பெண்கள் அன்னாசி பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வர வெள்ளைப்படுதல், சிறுநீர் எரிச்சல் போன்ற நோய்கள் குணமாகும்.

அன்னாசி பழத்தில் அதிக அளவு கால்சியம் மற்றும் மெக்னீசியம் உள்ளது. இது எலும்புகளின் வலிமையினை அதிகரிக்கின்றது. அன்னாசி பழத்தில் நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் மலச்சிக்கல் ஏற்படாமல் தடுக்கிறது. மேலும் ஜீரண மண்டலத்தினை வலுப்படுத்துகிறது.

அன்னாசி பழத்தில் அதிக அளவில் வைட்டமின் A சத்து உள்ளது. வைட்டமின் A சத்தானது பார்வை குறைபாடு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது. மேலும் பார்வை கோளாறு, மாலை கண் நோய் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட அன்னாசிபழம் உதவுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்