முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து காணப்படும் பச்சை பயறு !!

வெள்ளி, 8 ஏப்ரல் 2022 (17:01 IST)
முடி அடர்த்தியாக வளர பச்சை பயறு ஒரு சிறந்த தீர்வாகும். மேலும் பச்சை பயறு ஒரு அற்புதமான சூப்பர் ஃபுட் ஆகும் இது நீங்கள் ஒரு சிறிய அளவு உட்கொள்ளும்போது கூட ஆரோக்கியமான நன்மைகளை வழங்குகிறது.


முடிகளுக்கு தேவையான ஊட்ட சத்துக்கள் நிறைந்துள்ள உணவில் பச்சை பயறும் ஒன்றாகும்.  பச்சை பயரில் புரதம், பி வைட்டமின்கள், துத்தநாகம், இரும்பு மெக்னீசியம், கால்சியம் மற்றும் பல முடிகளுக்கு தேவையான ஊட்டச் சத்துக்கள் உள்ளன.

பி வைட்டமின்களில் ஒன்றான ஃபோலேட், பச்சை பயரில் அதிக அளவில் காணப்படுகிறது. இது முன்கூட்டியே நரைப்பதைத் தடுக்க உதவுகிறது மற்றும் முடியின் பொலிவு மற்றும் உயிர்ச்சக்தியை மீட்டெடுக்கிறது.

முடி வளர்ச்சிக்கு பச்சைப் பயறு பயன்படுத்துவது  தலைமுடி மற்றும் உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்க ஒரு சிறந்த வழியாகும். முடி வளர்ச்சியை ஊக்குவிக்க, முடிகளுக்கு உள்ளிருந்து ஊட்டம் கொடுக்க வேண்டும். உடல் மற்றும் முடி செல்கள் நல்ல ஊட்டச் சத்துக்களைச் சார்ந்துள்ளன.

முடி வளர்ச்சிக்கு முக்கியமான சத்துக்களான வைட்டமின் பி1 அல்லது தையமின் மற்றும் புரத சத்துக்கள் பச்சை பயரில் அதிக அளவு காணப்படுகின்றன.

பச்சை பயரில்  தாமிரம் உள்ளது. இது ஆரோக்கியமான உச்சந்தலை மற்றும் அடர்த்தியான கூந்தலுக்கு மிகவும் அத்தியாவசியமான கனிமமாகும். முடி வளர்ச்சிக்காக பச்சை பயறு உட்கொள்வது உடலுக்கு தேவையான அளவு தாமிரத்தை வழங்குகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்