முந்திரி பருப்பில் மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம், இரும்பு, மாங்கனீசு போன்ற சத்துக்கள் அடங்கியுள்ளன. உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை அளிப்பதில் முந்திரி முக்கிய பங்கு வகிக்கிறது.
தினமும் சிறிதளவு முந்திரி பருப்பு சாப்பிடுவதன் மூலம் செரிமானம் போன்ற ஜீரண மண்டல செயல்கள் சிறப்பாக நடைபெறுகின்றன. முந்திரிப்பருப்பில் நார்ச்சத்து மிகுந்துள்ளது. ஒலிக் அமிலம் மற்றும் பல்மிடிக் அமிலம் இவை இரண்டும் தான் உடலுக்கு தேவையான முக்கியமான இரண்டு நார்ச்சத்துக்கள். இவை முந்திரி பருப்பில் இருக்கின்றன.