வெங்காயத்தில் உள்ள சல்பர் முடி வளர்ச்சியைத் தூண்டும் தன்மை கொண்டது. இந்த சல்பர் குறிப்பாக முடி பிளவுபடுவதைத் தடுக்க துணைபுரியும். மேலும் இளநரை ஏற்படுவது தவிர்க்கப்படும். பொடுகு, பேன், தொல்லை, பூஞ்சை தொற்று போன்ற அனைத்து பிரச்சினைகளுக்கும் வெங்காயம் சிறந்து நிவாரணி ஆகும்.
கொத்தமல்லித் தழைகளைக் கழுவி ஒரு கப் அளவிற்கு எடுத்துக் கொள்ளவும். இதனை அரைத்து சாற்றை வடித்து எடுத்துக் கொள்ளவும். இதனை தலையில் பூசி அரைமணிநேரம் ஊறவைத்து விடுங்கள். பிறகு முடியினை ஷாம்பு கொண்டு நன்கு அலசவும். இதை வாரம் ஒரு முறை செய்யவும். முடி கருமையாகவும், பளபளப்பாக மாறி, அடர்த்தியாக வளரத் தொடங்கும்.
செம்பருத்தி இலைகளைப் பறித்து அரைத்து தலையில் தடவிக் கொள்ள வேண்டும். இதை அரைமணி நேரம் ஊறவைத்து ,பின்பு ஷாம்பு கொண்டு முடியை நன்றாக அலச வேண்டும். இந்த முறையை வாரம் ஒருமுறை செய்து வர முடி அடர்த்தியாக வளரத் தொடங்கும்.