திராட்சை பழத்தில் உள்ள சத்துக்களும் அதன் பயன்களும்...!!

Webdunia
திராட்சையில், விட்டமின்கள் பி-1, பி-2, பி-6, பி-12 மற்றும் விட்டமின் சி சத்துக்கள் அதிக அளவில் உள்ளன. இவைத்தவிர பாஸ்பரஸ், இரும்புச்சத்தும்  காணப்படுகின்றன. 

திராட்சை பழம், மூளை, இதயத்தை வலுவடையச்செய்யும். மேலும் வயிற்றுப்புண், மலச்சிக்கல் போன்ற பிரச்சனையை குணமாக்கி, கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் குமட்டல், வாய்க்கசப்பு போன்ற பிரச்சனைகளை தீர்க்கும். மேலும் ரத்தத்தில் குளுகோஸ் அளவு சீராகி, உடலில் கொழுப்புச்சத்து சேர்வதை தடுக்கும்.
 
மார்புச்சளியை போக்குகிறது. நுரையீரலை பாதுகாக்கும் ஆற்றல் இதற்கு உண்டு. ரத்த சோகைக்கும், காமாலை நோய்க்கும் கூட இது சிறந்த மருந்தாகிறது. குடல் புண்ணையும் ஆற்றும் தன்மை கொண்டது. களைப்பைப் போக்கி ஆழ்ந்த உறக்கத்தைத் தரும். அஜீரணம், பசியின்மை, வயிறு உப்புசம் போன்றவற்றுக்கு திராட்சை  சிறந்த மருந்து.
 
தினமும் திராட்சை சாறு குடித்தால், மாதவிடாய் காலத்தில் ஏற்படும் வயிற்று வலி பிரச்சனைக்கு நல்ல பலன் கிடைக்கும். பெண்களுக்கு சீரற்ற மாதவிடாயை  சீராக மாற்றும். மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வயிற்று வலியை போக்குகிறது.
 
பித்தம் தணியும். இரத்தத்தை சுத்தப்படுத்தி, புதிய ரத்தத்தை ஊறவைக்கும். நரம்புகளுக்கு வலுவூட்டும். எடை குறைவாக மற்றும் அதிக சூடு இருப்பவர்கள் திராட்சை பழம் சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
 
உஷ்ணத்தினால் ஏற்படும் சிறுநீர் கடுப்பை குணப்படுத்துகிறது. வளரும் குழந்தைகளுக்கு திராட்சை அருமருந்தாகும். ஜலதோஷத்தினால் மூக்கில் இருந்து நீர்வடிதல், இருமல், தும்மல் போன்றவற்றை திரட்சை பழச்சாறு குணப்படுத்துகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்