ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ள முள்ளங்கியின் மருத்துவப் பயன்கள்!!

முள்ளங்கியில் விட்டமின் சி, இ, பி6, ஃபோலேட்டுகள் அதிகளவு காணப்படுகிறது. இதில் விட்டமின் ஏ, கே, பி2, பி5 (நியாசின்) ஆகியவை காணப்படுகின்றன. தாது உப்புக்களான கால்சியம், காப்பர், இரும்புச் சத்து, மெக்னீசியம், மாங்கனீசு, துத்தநாகம், பொட்டாசியம் போன்றவை உள்ளன. மேலும் இதில் குறைந்த எரிசக்தி, கார்போஹைட்ரேட், புரதச்சத்து, அதிகளவு நார்சத்து  போன்றவை காணப்படுகின்றன.

 
முள்ளங்கினை உண்ணும்போது அவை குறைந்த அளவு எரிசக்தியுடன் வயிறு நிரம்பிய உணர்வினை ஏற்படுத்துகின்றது.  இக்காயில் நார்சத்து மற்றும் அதிகளவு நீர்ச்சத்தினையும் கொண்டுள்ளது. எனவே உடல் எடையை குறைக்க விரும்புவர்களுக்கு இக்காய் சிறந்த தேர்வாகும்.
 
முள்ளங்கியானது கல்லீரல் மற்றும் செரிமான உறுப்புகளில் உள்ள கழிவுகள் மற்றும் நச்சினை நீக்க உதவுகிறது. முள்ளங்கியானது இரத்தத்தில் ஆக்ஸிஜனின் அளவினை அதிகரித்து இரத்த சிவப்பு அணுக்களின் எண்ணிக்கை உயர்த்துகிறது.
 
இரத்தத்தில் பிலிரூபினின் அளவினை கட்டுப்படுத்துகிறது. மஞ்சள் காமாலையினால் பாதிக்கப்பட்ட கல்லீரல் மற்றும்  பித்தப்பையினை இக்காயில் உள்ள ஊட்டச்சத்துக்கள் சரி செய்து கல்லீரல் மற்றும் பித்தப்பையில் உள்ள செல்கள் நன்கு செயல்பட ஊக்குவிக்கின்றன.
 
முள்ளங்கியில் உள்ள அதிகளவு உள்ள நார்ச்த்து மற்றும் நீர்ச்சத்து மலத்தினை இளக்கி கழிவாக எளிதாக வெளியேற்றுகிறது. செரிமான உறுப்புகளில் உள்ள நச்சுப் பொருட்களை இக்காய் நீக்குவதால் மூலநோய், வாயு தொந்தரவு, மலச்சிக்கல்  ஆகியவற்றிற்கு இது சிறந்த தீர்வாக உள்ளது.
 
முள்ளங்கியானது சிறுநீரை நன்கு பெருகச் செய்கிறது. சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சலானது முள்ளங்கிச் சாற்றினை  அருந்தும்போது குணமாகிறது. இக்காயானது சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீர் பாதையில் உள்ள நச்சினை வெளியேற்றுகிறது.  சிறுநீரகம் மற்றும் சிறுநீர் பாதையில் ஏற்படும் குறைபாடுகளுக்கு இக்காய் நல்ல மருந்தாக உள்ளது.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்