உடலில் உள்ள டாக்ஸின்களை வெளியேற்றும் முள்ளங்கி சாறு!

முள்ளங்கியில் உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும்  பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது.

 
1. காய்கறிகளுள் முள்ளங்கி வாய்வுத் தொல்லையில் இருந்து விடுவிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே.முள்ளங்கியை சாறு  எடுத்து வாரம் ஒருமுறை குடித்து வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை எப்போதுமே ஏற்படாது. 
 
2. முள்ளங்கியை பச்சையாகவோ அல்லது வேக வைத்தோ சாப்பிடுவதை விட, சாறு வடிவில் எடுத்தால், அதில் உள்ள  சத்துக்களை உடலால் எளிதில் உறிஞ்ச முடியும்.
 
3. கல்லீரல் மற்றும் பித்தப்பையை சுத்தம் செய்து, நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும் நொதிகளின் வெளியீட்டிற்கு  உதவும்.
 
4. முள்ளங்கி சாற்றில் வைட்டமின் ஏ, பி6, சி, பொட்டாசியம், கால்சியம், ஃபோலேட் அமிலம், காப்பம், ஜிங்க், மாங்கனீசு  போன்றவை வளமாக உள்ளது.
 
5. முள்ளங்கி ஜூஸ் பித்த நீரின் அளவை சீராக்கி, பிலிரூபின் உற்பத்திக்கு உதவி, செரிமான பிரச்சனைகளில் இருந்து  விடுவிக்கும். மஞ்சள் காமாலையை சரிசெய்யும்.
 
6. முள்ளங்கி சாறு உடலின் உள்ள அழுக்குகளை வெளியேற்றும். குறிப்பாக சிறுநீரகம், சிறுநீர்ப்பை, புரோஸ்டேட்  போன்றவற்றில் உள்ள தீங்கு விளைவிக்கும் டாக்ஸின்களை வெளியேற்ற உதவும்.

வெப்துனியாவைப் படிக்கவும்