இத்தனை அற்புத பலன்களை தருகிறதா வேப்ப எண்ணெய் !!

Webdunia
செவ்வாய், 28 டிசம்பர் 2021 (12:13 IST)
வேப்ப எண்ணெய்யுடன், தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் ஆயில் கலந்து தலைக்கு தடவி, ஒரு மணி நேரம் நன்கு ஊறிய பின்பு குளிக்க வேண்டும். 

மூன்று வாரங்களுக்கு இப்படி தேய்த்துக் குளித்து வந்தால் நெடு நாட்களாக இருக்கும் ஈறு, பொடுகு மற்றும் பேன் தொல்லைகள் நீங்க பெறலாம்.
 
சோரியாசிஸ் பிரச்சனையை போக்க இரவில் படுக்கும் முன் வேப்ப எண்ணெயை தடவி, காலையில் எழுந்ததும் சுத்தமாக கழுவ வேண்டும். இதனை தொடர்ந்து பின்பற்றி வந்தால் சொரியாசிஸ் பிரச்னையை குணப்படுத்தலாம்.
 
சைனஸ் தொல்லை நீங்க தினமும் காலை, மாலை இருவேளைகளிலும் வேப்ப எண்ணெயின் 2 துளிகள் மூக்கில் இட்டு வர சைனஸ் தொல்லை விலகும்.
 
வேப்ப எண்ணெயுடன் தூய தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை 1:4 என்ற விகிதத்தில் கலந்து உடலில் தேய்த்த்து கொண்டு உறங்குவதால், கொசுக்கடி மற்றும் பூச்சி கடிகளிலிருந்து இருந்து தப்பிக்கலாம்.
 
உள்ளுக்கு சிறிதளவு அடிக்கடி சாப்பிடுபவர்களுக்கு உடலின் உள்ளுறுப்புகளில் எத்தகைய புற்று நோய்களும் ஏற்படாமல் தடுக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்