பாரம்பரிய மருத்துவத்தில் அற்புத பயன்தரும் வேப்ப எண்ணெய் !!

Webdunia
வேப்ப எண்ணெய்யை தொடர்ந்து பயன்படுத்தி வருபவர்களுக்கு தோல் சம்பந்தமான புற்றுநோய்கள் ஏற்படும் ஆபாயம் குறைவு.

நோயெதிர்ப்பு சக்தி என்பது நமது உடலின் பாதுகாப்பு அரண் ஆகும். ஆகும். இது பல்வேறு பாக்டீரியா, பூஞ்சை, வைரஸ் மற்றும் பிற நோய்களில் இருந்து நமது உடலை பாதுகாக்கிறது. வேப்ப எண்ணெய் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்த உதவுகிறது.
 
அனைத்து விதமான சுவாசப் பிரச்சனைகளையும் நீக்கும் தன்மை வேப்ப எண்ணைக்கு உண்டு. கெட்ட சுவாசம், ஆஸ்துமா போற்றவற்றை குணப்படுத்த வேப்ப எண்ணெய் பயன்படுகிறது. ஆயுர்வேத மற்றும் பாரம்பரிய மருத்துவத்திலும் வேப்ப எண்ணெய் நெடுங்காலமாக பயன்படுத்தப்படுகிறது.
 
வேப்ப எண்ணெய்யை எடுத்து அதை சிறிது நீரில் கலந்து, முகத்தில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் சருமத்தின் எண்ணெய் பசைக்  கட்டுப்படும். மேலும் முகப்பரு போன்ற சரும பிரச்சனைகளும் அகலும்.
 
வேப்ப எண்ணெய்யை பஞ்சில் நனைத்து பல்லில் வைத்தால் பல் வலிக்கு உடனே நிவாரணம் கிடைக்கும். ஈறுகளைப் பாதுகாக்கவும், வாயில் உண்டாகும் கிருமிகளை ஒழிக்கவும் வேப்ப எண்ணெய் பெரிதும் பயன்படுகிறது.
 
கல்லீரலின் செயல்பாட்டை மேம்படுத்துவதற்கு 5 கிராம் உலர்ந்த வேப்பம் பூவை 50 மி.லி. குடிநீர் விட்டு, அதனுடன் சில துளிகள் வேப்ப எண்ணெய் சேர்த்து மூடி வைத்திருந்து வடிகட்டிச் குடித்து வரப் பசியின்மை, உடல் தளர்ச்சி போன்றவை நீங்கி கல்லீரல் நன்கு இயங்கும். 

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்