அமினோ அமிலங்கள், வைட்டமின் பி6, சி, நார்ச்சத்து, பொட்டாசியம், மெக்னீசியம், மாங்கனீசு போன்ற சத்துக்கள் நிறைந்த பழம் வாழை.
மழைக்காலத்தில் வாழைப்பழம் சாப்பிடுவது முற்றிலும் பாதுகாப்பானது மற்றும் பல வழிகளில் உடலுக்கு நல்லது.
ஆனால் அதனை எப்போது சாப்பிடுகிறீர்கள், எப்படி சாப்பிடுகிறீர்கள் என்பது விளைவுகளை மாற்றும்.
வாழையை தினமும் சாப்பிடுவதால் நோய் எதிர்ப்பு சக்தி, மூளை செயல்பாடு மற்றும் இருதய ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவுகிறது.
அஜீரணம், இருமல் அல்லது ஆஸ்துமாவால் பாதிக்கப்படுபவர்கள் இரவில் வாழைப்பழம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.
வாழைப்பழத்தை வெறும் வயிற்றில் சாப்பிடுவது வயிற்றில் அதிக அமிலத்தன்மையை ஏற்படுத்தும்.
இந்த பழத்தில் உள்ள பொட்டாசியம் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இதய நோய்களால் பாதிக்கப்படுபவர்களுக்கு ஆபத்தானது.
வாழைப்பழங்களை சாப்பிடுவதற்கு சிறந்த நேரம் காலை உணவின் போது அல்லது இடைவேளையின் போது சிற்றுண்டியாக சாப்பிட வேண்டும்
வாழைப்பழங்களை பால் அல்லது பால் சார்ந்த உணவுகளுடன் உட்கொள்வது நச்சுத்தன்மை வாய்ந்ததாக கருதப்படுகிறது.