இதயத்தை காக்க சிறந்த உணவுகளுள் ஒன்று காளான் !!

Webdunia
காளான் இரத்தத்தில் கலந்துள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைத்து இரத்தத்தைச் சுத்தப்படுத்தும் தன்மை கொண்டது. இதனால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. 

மற்ற காய்கறிகளில் பெற முடியாத உயிர்ச்சத்தான, உயிர்ச்சத்து டி காளானில் அதிகமாகவும் எளிதாகவும் பெறலாம். உணவுக் காளான்கள் சுவையும் சத்துமிக்க  சிறந்த உணவாகப் பயன்படுகின்றன.
 
இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். பொதுவாக உயர் இரத்த அழுத்தம் ஏற்படும்போது உட்புறச் செல்களில் பொட்டாசியத்தின் அளவு குறையும். வெளிப்புறச் செல்களில் உள்ள சோடியம், உட்புறமுள்ள பொட்டாசியத்திற்கு சமமாக இருக்கும்.
 
இரத்த அழுத்தத்தின் போது வெளிப்புறத்தில் சோடியம் அதிகரிப்பதால் சமநிலை மாறி உற்புறத்தில் பொட்டாசியத்தின் அளவு குறைகிறது. இதனால் இதயத்தின் செயல்பாடு மாறிவிடுகிறது. இத்தகைய நிலையைச் சரிசெய்ய பொட்டாசியம் சத்து தேவை. அவை உணவுப்பொருட்களின் மூலம் கிடைப்பது சாலச் சிறந்தது. அந்த  வகையில் பொட்டாசியம் சத்து அதிகம் உள்ள உணவு காளான்தான். 
 
100 கிராம் காளானில் பொட்டாசியம் சத்து 447 மி.கி. உள்ளது. சோடியம் 9 மி.கி உள்ளது. எனவே இதயத்தைக் காக்க சிறந்த உணவாக காளான் உள்ளது.
 
மேலும் காளானில் தாமிரச்சத்து உள்ளதாகவும் கண்டறியப்பட்டுள்ளது. தாமிரச்சத்து இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும். காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. 
 
தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக கண்டுபிடித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்