பச்சை, சிவப்பு, ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறங்களில் குடைமிளகாய் கிடைக்கிறது. இருந்தாலும் பச்சை குடைமிளகாய்கள் தான் பெருமளவில் சமையலுக்கு பயன்படுத்தப்படுகின்றது.
குடைமிளகாயில் நார்ச்சத்து, வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் பைட்டோ கெமிக்கல்கள் நிறைந்துள்ளது. வைட்டமின் ஏ, வைட்டமின் சி, ஃபோலேட், டயட்டரி ஃபைபர் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றின் வளமான மூலமாகும். இதில் கால்சியம், துத்தநாகம், மாங்கனீசு, தாமிரம், வைட்டமின் ஈ, வைட்டமின் கே போன்றவை உள்ளன.
நார்ச்சத்து நிறைந்திருப்பதைத் தவிர, குடைமிளகாய் நல்ல அளவு வைட்டமின் பி 6, ஃபோலேட், லைகோபீன் மற்றும் பொட்டாசியம் ஆகியவற்றைக் கொண்டுள்ளது இவை அனைத்தும் இரத்த ஓட்டம் மற்றும் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகின்றன.