புளியம் பழத்தில் என்னவெல்லாம் நன்மைகள் உள்ளது...?

திங்கள், 2 மே 2022 (10:25 IST)
கொழுந்தான புளிய இலைகளை வேகவைத்த பாசிப்பருப்புடன் சேர்த்து, கூட்டு போல செய்து சாப்பிட, உடல் வலுவாகும்.


புளிய இலைகளைப்போல, அதன் பூக்களும் நலம் தருபவை, புளியம் பூவை துவையலாக செய்து சாப்பிட, தலைச்சுற்றல் மயக்கம் சரியாகும். கண் சிவப்பு மறைய, புளியம் பூக்களை அரைத்து கண்களைச் சுற்றி பற்று போட்டுவர வேண்டும்.

புளியில் வைட்டமின், கால்சியம், இரும்பு மற்றும் தாதுச்சத்துக்கள் நிறைந்துள்ளன. புளியின் பொதுவான மருத்துவ குணங்கள், மலச் சிக்கலை சரிசெய்யும், உடல் சூட்டை சீர்செய்து, கண் எரிச்சலை போக்கி, உடலை நலமாக்கும்.

சமையலில் இன்றியமையாத ஒரு பொருளாக, புளி விளங்குகிறது. புளி சேர்க்காத சாம்பார், குழம்பு, மற்றும் ரசம் என்பது, வெகு அரிது. புளியை நீரில் சுட வைத்து, உப்பிட்டு, அதை இரத்தக் கட்டுகளின் மேல் பூசிவர, இரத்தக் கட்டுகள் யாவும் குணமாகும்.

தேள் கொட்டிய விஷம் இறங்க, வலி போக, புளியை சுண்ணாம்பு கலந்து, கடித்த இடத்தில் இட வேண்டும். வாய்ப் புண்கள் குணமாக, புளி கலந்த நீரில் அவ்வப்போது, வாயை கொப்புளித்து வரலாம்.

புளியங் கொட்டைகளை தூளாக்கி, பாலில் சிறிது இட்டு, பனங்கற்கண்டு கலந்து பருகிவர, உயிர்த்தாது வளமாகும். உடலில் புரதச்சத்து குறைபாடு உள்ளவர்கள், புளியங் கொட்டைகளை வறுத்தோ வேகவைத்தோ உணவில் விரும்பும் வகையில் சேர்த்துவர, புரதக் குறைபாடுகள் நீங்கி, உடல் நலம் பெறலாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்