எளிதாக கிடைக்கும் கொத்தமல்லியில் உள்ள ஏராளமான நன்மைகள் !!

Webdunia
வியாழன், 9 ஜூன் 2022 (09:06 IST)
கொத்தமல்லியின் இலை, தண்டு, வேர் அனைத்தும் மருத்துவப் பயன் கொண்டவை. சாம்பார், ரசம் போன்ற தமிழர் சமையலில் இதன் விதைகள் பயன்படுகின்றன.


கொத்துமல்லி குளிர்ச்சி தரக்கூடியது. தோல்நோய்களை குணப்படுத்தவல்லது. கொத்துமல்லி சாறு எடுக்கவும். இதனுடன், சிறிது சந்தன தூள், பனங்கற்கண்டு சேர்த்து பாகுப்பதத்தில் கொதிக்க வைக்கவும். இதில், இருந்து சிறிது எடுத்து நீர்விட்டு கலந்து குடித்துவர உடல் எரிச்சல் சரியாகும்.

தேவையான பொருட்கள்: கொத்துமல்லி, சந்தனத்தூள், பனங்கற்கண்டு. செய்முறை: கொத்துமல்லி சாறு எடுக்கவும். இதனுடன், சிறிது சந்தன தூள், பனங்கற்கண்டு சேர்த்து பாகுப்பதத்தில் கொதிக்க வைக்கவும். இதில், இருந்து சிறிது எடுத்து நீர்விட்டு கலந்து குடித்துவர உடல் எரிச்சல் சரியாகும்.

கொத்தமல்லி இலையில் இரும்புச்சத்து இருப்பதால், இரத்தசோகை வருவதற்கான வாய்ப்புக் குறைகிறது. உடலின் ஆற்றலை அதிகரிக்க, எலும்புகளின் ஆரோக்கியத்துக்கு, உறுப்புக்களின் இயல்பான இயக்கத்துக்கு என்று பெரிதும் உதவுகிறது.

இதில் உள்ள விட்டமின் A, C, பாஸ்பரஸ் உள்ளிட்ட தாதுஉப்புக்கள், அத்தியாவசியக் கொழுப்பு அமிலங்கள் பார்வைக் குறைபாடுகள் வருவதற்கான வாய்ப்பைக் குறைக்கின்றன.

கொத்தமல்லி இலையை தினமும் அளவோடு உணவில் சேர்துக்கொள்வது மிகவும் நல்லது அது நரம்பு, எலும்பு மற்றும் தசை மண்டலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குணமாக்கும். இது நன்கு பசியைத் தூண்டும் ஒரு மூலிகைத் தாவரம். வாயு பிரச்சனையை குணமாக்கும்.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்