இத்தனை அற்புத சத்துக்களை கொண்டதா பரட்டை கீரை !!

செவ்வாய், 17 மே 2022 (17:42 IST)
நாம் பல்வேறு பச்சை காய்கறிகளை சமைத்தும், சாலடாகவும் பயன்படுத்தினாலும், பரட்டைக் கீரையின் பயன்பாடு குறைவாகவே உள்ளது.


பரட்டை  கீரையில் நார்ச்சத்து, கால்சியம், வைட்டமின் பி 6, மக்னீசியம், வைட்டமின் ஏ, 200 சதவைட்டமின் சி வைட்டமின் கே என பல ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. அதுமட்டுமல்ல, வைட்டமின் ஈ, இரும்பு சத்து, துத்தநாகம், ஃபோலேட் என வேறு சில சத்துக்களும் ஓரளவு இருக்கிறது.

பரட்டைக் கீரையில் உள்ள காரோட்டினாய்டுகள், ஃபிளேவனாய்டுகள் போன்றவை புற்றுநோயில் இருந்து பாதுகாக்கிறது. பரட்டைக் கீரையில் கலோரியின் அளவு குறைவாக இருப்பதாலும் கொலஸ்ட்ராலை குறைக்கும் தன்மையாலும் இதயத்திற்கும் நல்லது.

இரத்த அழுத்தத்தை நிர்வகிக்க உதவும் பரட்டைக் கீரை, உணவு செரிமானத்தை அதிகரிக்கிறது என்பதும், புற்றுநோய் மற்றும் நீரிழிவு நோயாளிகளை பாதுகாக்கிறது என்பதால் அனைவரும் தவிர்க்காமல் உண்ண வேண்டிய கீரை பரட்டை.

பரட்டைக் கீரையில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள், இயற்கையான செயல்முறைகள் மற்றும் சுற்றுச்சூழல் அழுத்தங்களின் விளைவாக ஏற்படும் தேவையற்ற நச்சுகளை அகற்ற உடலுக்கு உதவுகின்றன.

இதில் உள்ள பொட்டாசியம், உயர் இரத்த அழுத்தம் மற்றும் இருதய நோய் அபாயத்தைக் குறைக்கும். இந்தக் கீரையில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது.

அதோடு நார்ச்சத்தும் அதிகமாக இருப்பதால் மலச்சிக்கலைத் தடுக்கவும், சீரான மற்றும் ஆரோக்கியமான செரிமானப் பாதையை மேம்படுத்தவும் உதவுகிறது பரட்டைக் கீரை.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்