சிறப்பான மருத்துவ பண்புகளை கொண்ட விளக்கெண்ணெய் !!

புதன், 16 மார்ச் 2022 (09:55 IST)
விளக்கெண்ணெய், தாவர எண்ணெய் ஆகும். ஆமணக்கில் இருந்து எடுக்கும் இந்த எண்ணெய் மட்டுமல்ல, ஆமணக்குச் செடியின் இலைகள், வேர், விதை, ஆகியவையும் சிறப்பான மருத்துவப் பண்புகளைக் கொண்டவை.


சிறந்த மருத்துவ குணங்கள் வாய்ந்த ஒரு எண்ணெய் தான் “ஆமணக்கு எண்ணெய்” அல்லது “விளக்கெண்ணெய்”.

மலச்சிக்கல் பிரச்சனை தீவிரமாக இருப்பவர்கள் விளக்கெண்ணெய்யின் சில துளிகளை இரவு தூங்குவதற்கு முன்பு அருந்தினால் காலையில் சுலபத்தில் மலம் கழிக்க உதவும். இம்முறையை தினமும் கடைபிடிக்க கூடாது.

விளக்கெண்ணெய்யின் சில துளிகளை இந்த சொறி, சிரங்கு, அரிப்பு ஏற்பட்ட இடங்களின் மீது விட்டு நன்கு தடவி வந்தால் இப்பிரச்சினைகள் விரைவில் நீங்கும்.

விளக்கெண்ணெய்யின் சில துளிகளை வீக்கம் ஏற்பட்ட இடங்களில் தடவி, அந்த இடத்தின் மீது ஒத்தடம் கொடுக்க வீக்கம் விரைவில் குறையும்.

உடலில் பித்த தன்மை அதிகமாகும் நபர்களுக்கு பாத வெடிப்புகள் அதிகம் ஏற்படும். இப்படி பட்ட நபர்கள் தினமும் உறங்க செல்லும் முன்பு விளக்கெண்ணெய்யின் சில துளிகளை பாத வெடிப்புகளின் மீது தடவி வந்தால் விரைவில் பாத வெடிப்புகள் நீங்கும்.

தலைமுடி உதிர்வுக்கு விளக்கெண்ணெய் அருமருந்தாக பயன்படுகிறது. இந்த எண்ணெய்யை தலையில் தேய்த்த பிறகு, 10 நிமிடத்தில் குளிக்க வேண்டும். வார ஒரு முறை இப்படிச் செய்தால் தலைமுடி நன்கு வளரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்