சருமத்திற்கு நல்ல பொலிவை தரும் எலுமிச்சை !!

Webdunia
திங்கள், 28 பிப்ரவரி 2022 (13:45 IST)
உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தினமும் வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான தண்ணீரில் எலுமிச்சை சாறு,  சிறிதளவு தேன் கலந்து சாப்பிட்டு வந்தால் விரைவில் உடல் இளைத்து உடல் பொலிவு உண்டாகும்.


வாய்துர்நாற்றம் ஏற்படாமல் இருக்க தினமும் எலுமிச்சை சாறினை வெந்நீரில் கலந்து வாய் கொப்பளித்து வந்தால் வாய்துர்நாற்றம் ஏற்படாது.

அதிக கொழுப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட்டு அஜீரண கோளறு ஏற்பட்டால் சிறிதளவு எலுமிச்சை சாறு குடித்தால் விரைவில் ஜீரணம் ஆகும்.

எலுமிச்சை உடலுக்கு நன்மை அளிப்பதோடு சருமத்திற்கு நல்ல பொலிவை தருகிறது. எலுமிச்சை பழ சாறினை முகத்தில் தேய்த்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், முகச்ச்சுருக்கம்,கரு வளையம் அனைத்தும் மறைந்து விடும்.

எலுமிச்சை பழத்தை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் தலை முடி நன்கு கருமையாகவும், பொலிவாகவும், மென்மையாகவும் இருக்கும்.

எலுமிச்சை உடலில் நோய் எதிர்ப்பு சக்த்தியை அதிகப்படுத்தி நோய் வராமல் தடுக்கிறது. எலுமிச்சையில் உள்ள புளிப்பு சுவை நாம் உண்ணும் உணவை எளிதில் ஜீரணம் அடைய செய்து பசியை தூண்ட செய்கிறது.

நாம் முகத்திற்கும், தலைக்கும் பயன்படுத்தும் அனைத்து அழகு சாதன பொருட்களிலும் எலுமிச்சை மிக அதிக அளவில் பயன்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்