நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த ஆற்றலை கொடுக்கும் எலுமிச்சை !!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (12:08 IST)
எலுமிச்சை பழத்தில் நாம் அறிந்திடாத பல நன்மைகள் இருக்கின்றது. ஆரோக்கியத்தினை அள்ளித்தரும் பழம் என்றால் எலுமிச்சையைக் கூறலாம்.  


எலுமிச்சையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி 6, வைட்டமின் சி, வைட்டமின் ஈ, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு, பாஸ்பரஸ், துத்தநாகம், தாமிரம், பாந்தோத்தேனிக் அமிலம், நியாசின், தியாமின் மற்றும் பல வகையான புரதங்கள் உள்ளன.

மிகவும் புளிப்பு சுவையுடன் இருக்கும் எலுமிச்சை உடலில் செரிமான தொந்தரவினை போக்குகின்றது. எலுமிச்சை பழத்தின் சாரை குடிப்பதால் உடலில் கூடுதல் கலோரிகளை எரிப்பதோடு, எடையினைக் குறைப்பதற்கு பெரிதும் உதவி செய்கின்றது.

ஆரோக்கியத்திற்கு மட்டுமல்ல, சருமத்திற்கும் மிகவும் நன்மையைக் கொடுக்கின்றது. எலுமிச்சை விதைகள் முகத்தில் உள்ள முகப்பருவை அகற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்பு நிறைந்தது.

தொப்பை மற்றும் எடையைக் குறைக்க நினைப்பவர்கள், வெதுவெதுப்பான நீரில் அரை எலுமிச்சையை பிழிந்து அதில் தேன் கலந்து வெறும் வயிற்றில் குடித்தால் நிச்சயம் பலன் தரும்.

ரத்ததில் அதிக சர்க்கரை உள்ளவர்களுக்கு எலுமிச்சைப் பழம் சிறந்த தேர்வாக அமைவதோடு, நீரிழிவு நோயாளிகளுக்கு மிகுந்த ஆற்றலைக் கொடுக்கின்றது.

எலுமிச்சை சாற்றில் இஞ்சி சாற்றை சிறிது சர்க்கரையுடன் கலந்து சாப்பிடுவது வயிற்று வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது. அதுமட்டுமின்றி காய்கறிகள் மற்றும் பருப்பு வகைகளில் எலுமிச்சை பழத்தை பிழிவது காய்கறிகளின் சுவை மற்றும் ஊட்டச்சத்துக்களை அதிகரிப்பதுடன், எளிதில் ஜீரணிக்கவும் செய்கின்றது.

தொடர்புடைய செய்திகள்

அடுத்த கட்டுரையில்